சென்னை: கந்து வட்டி கொடுமையால் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்களைத் தடுக்க 'ஆபரேஷன் கந்து வட்டி' என்ற ஒரு திட்டத்தை அண்மையில் தமிழக காவல்துறைத் தலைவர் டிஜிபி சைலேந்திர பாபு தொடங்கிவைத்தார்.
கந்துவட்டி தொடர்பான புகார்களையும் நிலுவையில் உள்ள வழக்குகளையும் உடனடியாக விசாரிக்கவும் அவர் உத்தரவிட்டார்.
"ஆபரேஷன் கந்து வட்டி' திட்டம் தொடங்கப்பட்டு ஒரு வாரமே ஆகியுள்ள நிலையில், மீட்டர் வட்டி, கந்துவட்டி தொடர்பாக 124 புகார்கள் பெறப்பட்டு உள்ளன. 32 கந்து வட்டி குற்றவாளிகள் கைதாகி உள்ளனர். 22 பேரிடம் இருந்து பூர்த்தி செய்யப்படாத காசோலைகள், ரூ.40 லட்சம் மதிப்புள்ள புரோநோட்டுகள், பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன," என்று டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்தார்.

