துாத்துக்குடி: தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது காயமுற்ற 12 பேருக்கு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ரூ.30 லட்சம் நிதி உதவி வழங்கி உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி போராட்டம் நடத்தியவர்கள் மீது போலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தச் சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். நுாற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர்.
சம்பவத்தின்போது காயமுற்று இயல்பு வாழ்க்கையை இழந்துள்ள சிலர், ஸ்டெர்லைட் ஆலை நிர்வா கத்தினரிடம் தங்களுக்கு உதவக் கோரி வலியுறுத்தினர்.
இதையடுத்து, முதல்கட்டமாக 12 பேருக்கும் தலா இரண்டரை லட்சம் ரூபாய் வீதம் 30 லட்சம் ரூபாய் நிதியுதவியை ஸ்டெர்லைட் நிர்வாகம் வழங்கி உள்ளது.

