மறைந்த தாய், மனைவி சிலைகள் முன்பு பிறந்தநாள்

மறைந்த தாய், மனைவி சிலைகள் முன்பு பிறந்தநாள்

1 mins read
30489271-37b2-42b1-8540-46f49cfa39f5
தாய் கமலாம்பாள், மனைவி மீனாட்சியம்மாள் சிலைகளுக்கு கேக் ஊட்டி பிறந்தநாள் கொண்டாடிய ஓய்வுபெற்ற காவலர்.படம்: ஊடகம் -

மயி­லா­டு­துறை: மயி­லா­டு­து­றை­யில் உயி­ரி­ழந்த தாய், மனை­விக்கு கோயில் கட்­டிய ஓய்­வு­பெற்ற காவல் உதவி ஆய்­வா­ளர் மதன்­மோ­கன், தனது 73வது பிறந்­த­நாளை அவர்­க­ளின் சிலை­க­ளின் முன்பு கேக் வெட்டி கொண்­டா­டி­ உள்ளது வியப்பை ஏற்­ப­டுத்­தி உள்ளது.

தனது தாய் கம­லாம்­பாள் மற்­றும் மனைவி மீனாட்­சி­யம்­மாள் ஆகி­யோரை நினை­வு­கூ­ரும் வகை­யில், தனது வீட்­டின் முன்பு கோயில் கட்டி இரு­வ­ருக்­கும் சிலை வைத்து தினந்­தோ­றும் விளக்­கேற்றி, பூசை செய்து வரு­கி­றார் மதன்மோகன்.

இந்­நி­லை­யில், தனது தாயும் மனை­வி­யும் உயி­ரோ­டி­ருப்­பது போலவே நிைனத்து, அவர்­களுக்கு முன்பு கேக்­ வெட்டி, ஊட்டிவிட்­டார். இது பிறந்­த­நாள் விருந்­துக்கு வந்த உறவினர்கள், நண்பர்களை நெகிழவைத்தது.