மூன்றாவது நாளாக தொடரும் பேச்சுவார்த்தை; தலைவர்களிடம் சமரசம் ஏற்படுத்த முயற்சி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியை விட்டுத்தர மறுப்பு

மூன்றாவது நாளாக தொடரும் பேச்சுவார்த்தை; தலைவர்களிடம் சமரசம் ஏற்படுத்த முயற்சி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியை விட்டுத்தர மறுப்பு

2 mins read
879ebc84-1ac1-4ce8-87d7-61132d9a6afd
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி. படம்: தமிழக ஊடகம் -

சென்னை: அதி­மு­க­வில் ஒற்­றைத் தலைமை விவ­கா­ரம் பூதா­க­ர­மாக வெடித்­துள்ள நிலை­யில், அது குறித்த முடிவை எடுப்­ப­தில் உச்­ச கட்ட குழப்­பம் நிலவி வரு­கிறது.

தொடர்ந்து மூன்­றா­வது நாளாக அதி­முக ஒருங்­கி­ணைப்­பா­ளர் ஓ.பன்­னீர்­செல்­வ­மும் இணை ஒருங்­கி­ணைப்­பா­ளர் எடப்­பாடி பழ­னி­சாமி­யும் தங்­க­ளது ஆத­ர­வா­ளர்­க­ளு­டன் தனித்­த­னி­யாக ஆலோ­சித்து வரு­கின்­ற­னர்.

முன்­ன­தாக பழ­னி­சா­மி­யின் ஆத­ர­வா­ளர்­க­ளான திண்­டுக்­கல் சீனி­வா­சன், ஆர்.பி.உத­ய­கு­மார் இரு­வ­ரும் ஓ.பன்­னீர்­செல்­வத்தை அவ­ரது வீட்­டில் சந்­தித்து, ஒற்­றைத் தலைமை முறையை ஏற்­றுக்­கொள்­ளும்­படி வலி­யு­றுத்­தி­னர்.

"ஓபி­எஸ் கடந்த காலங்­களில் முதல்­வர் வேட்­பா­ளர் பதவி, எதிர்க்­கட்­சித் தலை­வர் பதவி ஆகியவற்றை விட்­டுக்­கொ­டுத்து தியா­கம் செய்­துள்­ளார். இனி­யும் அவர் தியா­கம் செய்­ய­மாட்­டார்," என்று கூறினர் ஓபி­எஸ் ஆத­ர­வா­ளர்­கள்.

இதை­ய­டுத்து, அதி­மு­க­வின் அவைத் தலை­வர் பதவி, வழி­காட்டு­தல் குழுத் தலை­வர் பதவி ஆகிய முக்­கிய பத­வி­க­ளைக் கொடுப்­ப­தாகக் கூறி பழ­னி­சா­மி­யும் அவ­ரது ஆத­ர­வா­ளர்­களும் புதிய சம­ரச திட்­டத்துக்கு தூதுவிட்டனர்.

ஆனால், இவற்­றை­யும் ஏற்க ஓபி­எஸ் மறுத்­து­விட்­டார்.

தனது அதி­முக ஒருங்­கி­ணைப்­பா­ளர் பத­வியை விட்­டுக்கொடுக்க விரும்­ப­வில்லை என்­றும் இதே பதவியில் தொடர்ந்து செயல்­பட விரும்­பு­வ­தா­க­வும் அவர் திட்டவட்ட மாகத் தெரிவித்துள்­ளார்.

எனினும், அதி­மு­க­வில் ஒற்­றைத் தலைமை முறை­யைக் கொண்­டு­வந்துவிட வேண்­டும் என்­ப­தில் மிகவும் ஆர்வம் காட்டும் பழ­னி­சாமி தரப்­பினர், நேற்று வியா­ழ­னன்று மூன்­றா­வது நாளாக ஓபி­எஸ் தரப்பினருடன் தொடர்ந்து பேச்­சு­வார்த்­தை­யில் ஈடு­பட்ட­னர்.

இத­னி­டையே, ஒற்­றைத் தலைமை என்ற பேச்­சுக்கே இட­மில்லை என்று தெரிவித்துள்ள அதி­முக செய்­தித் தொடர்­பா­ளர் கோவை செல்­வ­ராஜ், "ஜெயக்­குமார் அதி­கா­ர­பூர்வ செய்­தித் தொடர்­பா­ளர் அல்ல. உட்­கட்சி விவ­கா­ரத்தை ஊட­கங்­க­ளுக்­குச் சொல்­வ­தற்கு அவ­ருக்கு யார் அதிகாரம் கொடுத் தது?" என்று வினவினார்.

முன்­னாள் அமைச்­சர் திண்­டுக்­கல் சீனி­வா­சன் தனது ஆத­ரவு பழ­னி­சா­மிக்­குத்­தான் என்­றார்.

"ஒற்­றைத் தலைமை முறை­தான் கட்சி நிர்­வா­கத்­துக்­கு நல்­லது. இரட்­டைத் தலை­மை­யில் முடி­வு­கள் எடுப்­ப­தில் தாம­த­மும் குழப்­ப­மும் ஏற்­ப­டு­கிறது. அதி­முக பொதுக்­குழு வரும் 23ஆம் ேததி கூட்­டப்­பட உள்­ள நிலையில், அதற்­குள் சுமூக முடிவு எட்டப்படும் என்று எதிர்­பார்க்­கி­றோம்," என்­றார்.

செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய முன்­னாள் அமைச்­சர்­கள் திரு தள­வாய் சுந்­த­ரம், திரு ஓ.எஸ்.மணி­யன், திரு­மதி வளர்­மதி ஆகி­யோர் ஒற்­றைத் தலைமை குறித்து சுமூக முடிவு எடுக்­கப்­படும் என்­ற­னர்.

ஆனால், "அதி­மு­க­வில் ஒற் றைத் தலைமை என்ற பேச்­சுக்கே இட­மில்லை," என அதி­முக துணை ஒருங்­கி­ணைப்­பா­ளர் வைத்­தி­லிங்­கம் தெரி­வித்­துள்­ளார். "அதி­முக பொதுச் செய­லா­ள­ராக பழ­னி­சாமி உள்­பட யாரும் வரவே முடி­யாது. இதற்கு சட்­டத்­தில் இட­மில்லை. இரட்­டைத் தலை­மை­தான். ஒற்­றைத் தலைமை கிடை­யாது," என அவர் உறுதிபட குறிப்­பிட்­டுள்­ளார்.