கோவை மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு

1 mins read
f5a3fa0a-80d6-4c10-b4b4-fc992b084ab5
-

கோவை: மீண்­டும் குழந்தை திரு­ம­ணங்­கள் அதி­க­ரித்­துள்­ளதை அடுத்து கோவை­யில் கண்­கா­ணிப்பு தீவி­ர­ம­டைந்­துள்­ளது.

குழந்தை திரு­ம­ணங்­களை ஊக்­கு­விப்­போர் மீதும் உ தவு­வோர் மீதும் கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என சமூக நலத்­துறை அதி­கா­ரி­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர்.

கடந்த ஆண்­டில் மட்­டும் கோவை­யில் 146 குழந்தை திரு­ம­ணங்­கள் நடந்­துள்­ள­தாக வழக்­குப் பதி­வாகி உள்­ளது. நடப்பு ஆண்­டில் இது­வரை 46 திரு­ம­ணங்­கள் நடந்­துள்­ளன.

கொரோனா வேளை­யில் குறைந்­தி­ருந்த குழந்தை திரு­ம­ணங்­கள் மீண்­டும் அதி­க­ரிக்­கத் தொடங்­கி­யி­ருப்­பது கவ­லைக்­கு­ரிய விஷ­ய­மாகி உள்­ளது.

கடந்த ஒன்­றரை ஆண்­டு­களில் நடந்­துள்ள 192 குழந்தை திரு­ம­ணங்­கள் தொடர்­பாக சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள் மீது வழக்­குப்­ப­திவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக சமூக நலத்­துறை அதி­கா­ரி­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

"குழந்தை திரு­மண சட்­டப்­படி மண­ம­கன், பெற்­றோர், உற­வி­னர்­கள், நண்­பர்­கள், திரு­மண மண்­டப உரி­மை­யா­ளர் என சம்­பந்­தப்­பட்ட அனை­வர் மீதும் வழக்கு பதிவு செய்­யப்­படும்.

"இந்­தக் குற்­றத்­துக்கு மூன்று ஆண்­டு­கள் வரை சிறைத்­தண்­ட­ணை­யும் ஒரு லட்­சம் ரூபாய் வரை அப­ரா­த­மும் விதிக்­கப்­படும். ஆனால் இதை அறிந்­தும் சிலர் இத்­த­கைய குற்­றத்­தில் ஈடு­ப­டு­கி­றார்­கள்," என்று கோவை சமூக நலத்­துறை அதி­கா­ரி­கள் கூறு­கின்­ற­னர்.

இதை­ய­டுத்து கோவை மாவட்­டத்­தில் உள்ள அனைத்­துப் பள்­ளி­க­ளுக்­கும் சென்று குழந்தை திரு­ம­ணங்­கள் கூடாது என்று விழிப்­பு­ணர்வு பிர­சா­ரம் மேற்­கொள்­ளப்­ப­டு­கிறது.