தனித்தனியாக ஆதரவு திரட்டும் தலைவர்கள்

தனித்தனியாக ஆதரவு திரட்டும் தலைவர்கள்

3 mins read
a946497f-36ce-43f1-88bf-60e572b95ddc
நிகழ்ச்சி ஒன்றில் பன்னீர்செல்வம், பழனிசாமி. படம்: ஊடகம் -

அதிமுகவில் மாவட்ட செயலாளர்களை வளைக்க முயற்சி

சென்னை: அதி­மு­க­வில் வெடித்­துள்ள உட்­கட்­சிப்­பூ­சல் நாளுக்கு நாள் பெரி­தாகி வரு­கிறது. இதை­ய­டுத்து கட்­சி­யின் மாவட்­டச் செய­லா­ளர்­க­ளின் ஆத­ர­வைப் பெறு­வ­தில் எடப்­பாடி பழ­னி­சாமி, ஓ.பன்­னீர்­செல்­வம் தரப்­பி­ன­ரி­டையே கடும் போட்டி நில­வு­கிறது.

எதிர்­வ­ரும் 23ஆம் தேதி அதிமுக பொதுக்­குழு கூட்­டம் நடை­பெற உள்­ளது. அதற்கு முன்­பா­கவே பெரும்­பான்மை மாவட்ட செய­லாளர்­க­ளின் ஆத­ர­வைப் பெற்­று­விட வேண்­டும் என இரு தரப்­பி­ன­ரும் காய்­களை நகர்த்தி வரு­கின்­றனர்.

பொதுச்­செ­ய­லா­ளர் பத­வி­யைப் பிடிக்க எடப்­பா­டி பழ­னி­சாமி முயற்சி செய்து வரு­வ­தா­கக் கூறப்­படும் நிலை­யில், ஓ.பன்­னீர்­செல்­வம் தரப்பு அவ­ருக்­கு கடும் முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

அதி­முக பொதுச்­செ­ய­லா­ள­ராக பொறுப்பு வகித்த ஜெய­ல­லிதா காலமான பின்­னர் அந்­தப் பத­வி­யில் அமர தங்­க­ளுக்கு விருப்­பம் இல்லை என்று கூறி, ஓ.பன்­னீர்­செல்­வம் அதி­முக ஒருங்­கி­ணைப்­பா­ள­ரா­க­வும் எடப்­பாடி பழ­னி­சாமி இணை ஒருங்­கி­ணைப்­பா­ள­ரா­க­வும் இருந்து கட்­சியை வழி நடத்தி வரு­கி­றார்­கள்

கட்சி சார்ந்த முடி­வு­களை இரு­வ­ரும் கலந்­தா­லோ­சித்த பிறகே எடுக்­கின்­ற­னர். எனி­னும் சட்­டப்­பே­ரவைத் தேர்­த­லுக்­குப் பிறகு கட்­சிக்கு ஒற்­றைத் தலைமை தேவை என்ற முணு­மு­ணுப்பு தொடங்­கி­யது.

இரு­வ­ரும் சேர்ந்து முடி­வெ­டுப்­பதில் தாம­தம் ஏற்­ப­டு­கிறது என்­றும் இத­னால் கட்­சி­யின் வளர்ச்சி பாதிக்­கப்­ப­டு­வ­தா­க­வும் நிர்­வா­கி­கள் பலர் வெளிப்­ப­டை­யா­கப் பேசத் தொடங்­கி­னர்.

எனவே கட்­சி­யின் எதிர்­கால நல­னுக்கு ஒற்­றைத் தலை­மையே சரி­யாக இருக்­கும் என்று பழ­னி­சாமி தரப்பு கூறி வரு­கிறது. ஆனால் பன்­னீர்­செல்­வம் தரப்பு தற்­போ­துள்ள ஏற்­பாடே நீடிக்க வேண்­டும் என்­கிறது.

எதிர்­வ­ரும் பொதுக்­குழு கூட்­டத்­தின்­போது பழ­னி­சா­மியை கட்­சி­யின் தலை­மைப் பத­விக்கு தேர்வு செய்ய வேண்­டும் என்­பதே அவ­ரது ஆத­ர­வா­ளர்­க­ளின் திட்­டம் என்­றும் இத­னால் பன்­னீர்­செல்­வம் தரப்பு கடும் கோபத்­தில் இருப்­ப­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், பழ­னி­சாமி தரப்பு தம்­மி­டம் கலந்­தா­லோ­சிக்­கா­ம­லேயே ஒற்­றைத் தலைமை குறித்து பேசி வரு­வ­தா­க­வும் அவ்­வாறு பேசு­ப­வர்­கள் மீது பழ­னி­சாமி நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்­றும் ஓபி­எஸ் வலி­யு­றுத்தி உள்­ளார்.

"எடப்­பாடி பழ­னி­சாமி தலை­மை­யி­லான அரசு நம்­பிக்கை இல்லா தீர்­மா­னத்­தில் வெற்றி பெறு­வ­தற்கு நான்­தான் கார­ணம். எனது ஆத­ர­வா­ளர்­க­ளு­டன் கட்­சி­யில் சேர்ந்­த­போது இரட்டை தலைமை பற்றி திடீ­ரென என்­னி­டம் கூறி­னர்.

"கட்­சி­யின் நலன் கருதி அதற்கு நான் அப்­போது ஒப்­புக்­கொண்­டேன். ஒற்­றைத் தலைமை விவ­கா­ரத்­தில் 23ஆம் தேதிக்­குள் சுமூக முடிவு எட்­டப்­பட வேண்­டும் என்று நான் கட­வுளை வேண்­டிக் கொண்­டி­ருக்­கி­றேன்," என்று நேற்று முன்­தி­னம் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசும்­போது பன்­னீர்­செல்­வம் தெரி­வித்­தார்.

தனது ஆத­ர­வா­ளர்­க­ளு­டன் கடந்த நான்கு தினங்­க­ளாக அவர் சென்­னை­யில் தீவிர ஆலோ­சனை நடத்தி வரு­கி­றார்.

இதற்­கி­டையே சேலத்­தில் எடப்­பாடி பழ­னி­சா­மியை ஆத­ரித்து அவ­ரது ஆத­ர­வா­ளர்­கள் சுவ­ரொட்டி­களை ஒட்­டி­யுள்­ள­னர். அவ­ரும் தன் பங்­கிற்கு ஆத­ர­வா­ளர்­க­ளு­டன் அடுத்­தக்­கட்ட நட­வ­டிக்­கை­களை திட்­ட­மிட்டு வரு­வ­தா­கக் கூறப்­படு­கிறது.

"மாவட்ட செய­லா­ளர்­க­ளின் ஆத­ரவு இருக்­கும் பட்­சத்­தில் கட்­சியை தங்­கள் கட்­டுப்­பாட்­டில் கொண்டு வந்­து­வி­ட­லாம் என்­று­தான் இரு தரப்­பி­ன­ரும் கணக்­குப்­போட்­டுள்­ள­னர். ஆனால், மாவட்ட செய­லா­ளர்­களில் இரு­வ­ரது நீண்ட நாள் ஆத­ர­வா­ளர்­கள் மட்­டுமே வெளிப்­ப­டை­யாக தங்­கள் நிலைப்­பாட்டை தெரி­வித்­துள்­ள­னர்.

"மற்ற மாவட்ட செய­லா­ளர்­கள் இரு தரப்­பி­ன­ரும் ஒற்­று­மை­யாக அழைப்பு விடுத்­தால் மட்­டுமே பொதுக்­குழு கூட்­டத்­தில் கலந்­து­கொள்­வோம் என்று கூறி­யுள்­ள­னர். எதிர்­வ­ரும் 23ஆம் தேதி அதிமுக­வில் பெரும் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தக்­கூ­டும்," என்­கி­றார்­கள் அர­சி­யல் பார்­வை­யா­ளர்­கள்.

அக்­கட்­சித் தொண்­டர்­களோ, என்ன நடக்­கிறது, அதன் பின்­னணி என்ன, அடுத்து என்ன நடக்­கும் என்­பது புரி­யா­மல் குழப்­பத்­தி­லும் கவ­லை­யி­லும் உள்­ள­னர் என்­றும் அர­சி­யல் கவ­னிப்­பா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.