1,000 முத­லை­களை இட­மாற்­று­வது குறித்து தமி­ழக அரசு விளக்­கம் அளிக்க உத்­த­ரவு

மாமல்­ல­பு­ரம்: ஆசியா கண்­டத்­தி­லேயே 2,000க்கும் மேலான முத­லை­கள் பரா­ம­ரிக்­கப்­படும் பண்­ணை­யாக வட­நெம்­மேலி முத­லைப் பூங்கா திகழ்ந்து வரு­கிறது.

இங்­கி­ருந்து 1,000 முத­லை­களைக் குஜ­ராத்­திற்கு இட­மாற்­றம் செய்­வதை எதிர்த்து சென்னை சிந்­தா­தி­ரிப்­பேட்­டை­யைச் சேர்ந்த ஓய்­வு­பெற்ற ராணுவ வீரர் ஏ.விஸ்­வ­நா­தன் என்­ப­வர் சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் வழக்­குத் தொடர்ந்­தார்.

இந்­நி­லை­யில், இந்த வழக்கு தொடர்­பாக சரி­யான விளக்­கம் அளிக்­கும்­படி தமி­ழக அர­சுக்­குச் சென்னை உயர் நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

சென்­னையை அடுத்த மாமல்­ல­பு­ரம், வட­நெம்­மே­லி­யில் உள்ள முத­லைப் பூங்காவில் 17 ரகங்­களைச் சேர்ந்த 2,000க்கும் மேலான முத­லை­கள் பரா­ம­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இந்த முத­லை­க­ளுக்கு நாள் ஒன்­றுக்கு கோழி, மாட்டு இறைச்சி என 500 கிலோ­வுக்­கும் மேல் உணவு வழங்­கப்­பட்டு வந்­தது.

இச்­சூ­ழ­லில், கடந்த இரண்டு ஆண்டு­க­ளாக கொரோனா ஊர­டங்கு கார­ண­மாக பார்­வை­யா­ளர்­க­ளுக்கு அனு­மதி அளிக்­கப்­ப­டா­மல் பூங்கா பூட்­டப்­பட்டு கிடந்­தது.

இத­னால், வரு­மா­ன­மின்றி முத­லை­க­ளின் பரா­ம­ரிப்­புச் செலவு, ஊழி­யர்­க­ளின் சம்­ப­ளம் உள்­ளிட்ட நிதிப் பிரச்­சி­னை­க­ளைச் சமா­ளிக்க முடி­யா­மல் முத­லைப் பண்ணை நிர்­வா­கத்­தி­னர் திண்­டாடி வந்­த­னர்.

இதை­ய­டுத்து, இங்­கி­ருந்த 1,000 முத­லை­களை விலங்­கு­கள் பாது­காப்­புச் சட்­டத்­தின்­படி வேறு இடத்­திற்கு மாற்­று­வ­தற்­காக மத்­திய உயி­ரி­யல் பூங்கா ஆணை­யத்­திற்­குக் கடி­தம் அனுப்­பி­னர்.

இதனை ஏற்­றுக்­கொண்ட மத்­திய உயி­ரி­யல் பூங்கா ஆணை­யம், ஆயி­ரம் முத­லை­களை இங்­கி­ருந்து குஜ­ராத்­திற்கு இட­மாற்­றம் செய்ய அனு­மதி வழங்­கி­யது.

இதை எதிர்த்து தொட­ரப்­பட்ட வழக்கு, தலைமை நீதி­பதி முனீஷ்­வர் நாத் பண்­டாரி, நீதி­பதி என்.மாலா அடங்­கிய அமர்வு முன்பு விசா­ர­ணைக்கு வந்­தது. அப்­போது, வழக்கு குறித்து அர­சின் வனவிலங்கு காப்­பா­ளர், மத்­திய வன உயி­ரின ஆணை­யம், குஜ­ராத்­தில் உள்ள கிரீன்ஸ் வன­விலங்­கு­கள் மையம், மாமல்­ல­பு­ரம் முத­லைப் பூங்கா நிர்­வா­கம் உள்­ளிட்­டோர் மூன்று வாரங்­களில் பதில் மனுத் தாக்­கல் செய்ய உத்­த­ர­விட்டு வழக்கு விசா­ர­ணையை ஒத்­தி­வைத்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!