‘மேக­தாது குறித்து விவா­தம் நடை­பெ­றும்’

திருச்சி: மேக­தாது அணை விவ­கா­ரம் குறித்து கண்­டிப்­பாக விவா­திக்­கப்­படும் என்று காவிரி நீா் மேலாண்மை ஆணை­யத்­தின் தலைவா் எஸ்.கே.ஹல்தா் தெரி வித்­துள்­ளார்.

இத­னால் தமி­ழக விவ­சா­யி­கள் அதிர்ச்சி அடைந்­துள்­ள­னர்.

மேக­தாது அணை பிரச்­சினை குறித்து விவா­திக்க காவிரி நீா் மேலாண்மை ஆணை­யத்­துக்கு முழு அதி­கா­ரம் இருப்­ப­தா­க­வும் அவர் மேலும் கூறி­னார்.

காவி­ரி­யின் குறுக்கே மேக­தாது அணை கட்­டு­வ­தில் கர்­நா­டக அரசு தீவி­ரம் காட்டி வரு­கிறது.

மேகதாது அணை­யைக் கட்­டி­னால் தமி­ழ­கத்­துக்கு கிடைக்­கும் நீரின் அளவு குறைந்­து­வி­டும்.

எனவே, இதனை எதிர்த்து தமி­ழக அரசு உச்ச நீதி­மன்­றத்­தில் வழக்­குத் தொடர்ந்­துள்­ளது.

வரும் 23ஆம் தேதி டெல்­லி­யில் நடக்­க­வுள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணை­யக் கூட்­டத்­தில் மேக­தாது விவகாரம் குறித்து விவா­திக்­கக் கூடாது எனவும் தமி­ழ­கம் தெரி­வித்து வரு­கிறது.

இந்­நி­லை­யில், தஞ்­சா­வூர் மாவட்­டத்­தில் உள்ள கல்­ல­ணை­யைப் பார்­வை­யிட்ட ஹல்தா் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­ய­போது, "பிலி­குண்­டுலு, மேட்டூா் அணை, கல்­லணை உள்­ளிட்ட காவிரி ஆற்­றுப் படுகை முழு­வ­தும் நேரில் பார்­வை­யிட்டு ஆய்வு செய்து வரு­கி­றோம். இதே­போல் கா்நாட­கத்­தி­லுள்ள காவிரி படு­கை­யை­யும் பாா்வையி­டு­வோம்.

"வரும் 23ஆம் தேதி ஆணை யத்­தின் கூட்­டம் நடை­பெ­றும்­போது, மேக­தாது அணை தொடர்­பாக கண்­டிப்­பாக விவா­திக்­கப்­படும். இதற்­கான சட்ட ஆலோ­சனை கிடைத்­துள்­ளது," என்றார்.

இத­னி­டையே, "உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் ஒரு விவகாரம் வழக்­காக இருக்­கும்­போது, அதனை விவா­திக்­கும் அதி­கா­ரம் ஆணை­யத்­துக்கு இல்லை. அது தெரிந்­தும் விவா­திப்­போம் என்று ஆணை­யத்­தின் தலை­வர் சொல்­வது சட்ட விரோ­த­மா­ன­து. காவி­ரி­யின் உரி­மையைக் காக்­க மாநில அரசு தொடர்ந்து போரா­டும். காவி­ரி­யின் குறுக்கே மேக­தாது அணையைக் கட்ட விட­மாட்­டோம்," என முதல்­வர் மு.க.ஸ்டா­லின் திட்­ட­வட்­ட மாகத் தெரி­வித்­துள்­ளார்.

தஞ்­சாவூா் மாவட்­டத்­தில் உள்ள பழ­மை­யான கல்­ல­ணையை வெள்­ளியன்று மாலை பாா்வையிட்ட காவிரி நீா் மேலாண்மை ஆணை­யத்­தின் தலைவா் எஸ்.கே. ஹல்தா், ஆணைய உறுப்­பினா் நவீன்­குமாா் உள்­ளிட்டோா்.

படம்: தினமணி ஊட­கம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!