செய்­திக்­கொத்து

செய்­திக்­கொத்து

2 mins read
541553da-2f4e-4ef4-b6e5-10505df239de
-

இலங்கைத் தமிழர்கள் ஏழு பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை

இரு குடும்­பத்­தைச் சேர்ந்த ஏழு இலங்கைத் தமி­ழர்­கள் தனுஷ்­கோடி அரிச்­சல்­முனை கடற்­க­ரைக்கு பட­கில் வந்து சேர்ந்­த­னர். காவலர்களின் முதற்­கட்ட விசா­ர­ணை­யில், வரு­மானமின்றி மிக­வும் சிரமப்பட்டதால் அக­தி­க­ளாக தனுஷ்­கோடிக்கு வந்­த­தா­க­வும் தங்க நகை­களைப் பட­குக் கட்­ட­ண­மாகக் கொடுத்ததாகவும் தெரி­வித்­த­னர். பின்னர், மண்­ட­பம் முகா­முக்கு அனுப்பப்பட்டனர். படம்: ஊட­கம்

'மலைப்­ப­கு­தி­யில் ஓராண்டுகாலம்

பணி­புரிவது கட்­டா­யம்'

கோவை: மலைப்­ப­கு­தி­கள் அதி­கமுள்ள மாவட்­டங்­களில் தொடக்­கக் கல்வி ஆசி­ரி­யர்­கள் ஓராண்டு காலம் கட்­டாய மாகப் பணி­யாற்றவேண்­டும் என்று பள்­ளிக் கல்­வித்­துறை உத்­த­ர­விட்­டுள்­ளது. மலைப்­ப­கு­தி­களில் பணி­யாற்ற ஆசி­ரி­யர்­கள் தயக்கம் காட்டுவது காரணமாக அரசு இந்நட­வ­டிக் கையை எடுத்­துள்­ளது. மலைப்­ப­கு­தி­கள் நிறைந்த ஈரோடு, தேனி, சேலம், தர்­ம­புரி, வேலூர், திண்­டுக்­கல், திருப்­பத்­தூர் ஆகிய ஏழு மாவட்­டங்­களில் உள்ள 20 கல்­விக்­கூ­டங்­களில் ஆசி­ரி­யர்­கள் ஓராண்டு காலத்­திற்கு சுழற்சி முறை­யில் கட்­டா­யம் பணி­யாற்றவேண்­டும் என்று அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

பிரேமலதா: தேமு­தி­க­தான்

உண்­மை­யான எதிர்க்­கட்சி

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே நடைபெற்ற ஸ்ரீ வெங்கடாஜலபதி கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசியபோது, "தமி­ழ­கத்­தில் கொலை, கொள்­ளைச் சம்பவங்கள் அதி­க­ரித்துவிட்­டன. விசா­ர­ணைக்கு என்று அழைத்­துச் செல்­லப்­படு­ப­வர்­கள் உயி­ரி­ழக்­கும் நிலைமை மோசமாகி வருகிறது. இது தடுக்­கப்­பட வேண்­டும்," என்றவர், "தேமு­திக­தான் சிறந்த எதிர்க்­கட்­சி­யாக விளங்குகிறது. மக்­கள் பிரச்­சி­னைக்­காக யார் குரல் கொடுத்து ஆளும் கட்­சி­யி­ன­ரி­டம் அந்­தப் பிரச்­சி­னை­களைக் கொண்டு செல்­கி­றார்­களோ அவர்­கள்­தான் உண்­மை­யான எதிர்க்­கட்சி. அந்த ­வ­கை­யில் மக்­க­ளின் எல்லா பிரச்­சி­னை­க­ளுக்­கும் முதல் ஆளாக, முதல் கட்­சி­யாக தேமு­தி­க­தான் குரல் கொடுத்து வரு­கிறது," என்றார்.

மு.க.ஸ்டாலின்: 80% வாக்­கு­றுதிகள்­ நிறை­வேற்­றப்­பட்­டு விட்டன

சென்னை: சென்னை அண்ணா அறி­வா­ல­யத்­தில் மூத்த நிர்­வா­கி­க­ளுக்குப் பொற்­கி­ழி­கள் வழங்­கும் நிகழ்ச்சி நடை­பெற்­றது. அப்போது, திரு­வள்­ளூர் மாவட்ட மூத்த முன்­னோ­டி­கள் 500 பேருக்கு தலா 10,000 ரூபாயும் புத்­தா­டையையும் வழங்கிப் பேசிய முதல்வர், "திமுக கொடுத்த தேர்­தல் வாக்­கு­று­தி­களில் 80% நிறை­வேற்­றப்­பட்டு உள்­ள­து. மீத­முள்ள 20% விரை­வில் நிறை­வேற்­றப்­படும்," என்றார்.

'கிருமிப் பரவல் அதிகரித்தாலும்

கட்டுப்பாடு விதிக்கும் சூழலில்லை'

செங்­கல்­பட்டு: தமி­ழ­கத்­தில் தின­சரி கொரோனா பாதிப்பு எண்­ணிக்கை 600ஐ நெருங்­கி­யது. இவர்­களில் அதி­க­பட்­ச­மாக சென்­னை­யில் மட்­டும் ஒரே நாளில் 286 பேருக்கு தொற்றுப் பாதிப்பு உறுதியானது. கொரோனா பாதிப்பு நாளும் அதி­கரித்து வந்தாலும் கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கும் சூழல் ஏற்படவில்லை என்று மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்சா் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்துள்ளார்.

கிரு­மிப் பர­வல் 10 விழுக்­காட்­டைத் தாண்­டும்­போது புதிய கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட வேண்­டும் என மத்­திய அரசு விதிமுறை வகுத்துள்ள நிலை­யில், தமி­ழ­கத்­தில் கிரு­மிப் பர­வல் பாதிப்பு விகி­தம் இரண்டு மூன்று விழுக்­காட்­டுக்­குள்­ளேயே உள்­ளது. தொற்­றால் பாதிக்­கப்ப­டு­வோர் எண்­ணிக்கை மேலும் அதி­க­ரித்­தால் கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட வாய்ப்புள்­ளது என்று தெரி­வித்­துள்­ளார்.