காலி­யான 501 பத­வி­களை நிரப்ப ஜூலை 9ல் தேர்­தல்

காலி­யான 501 பத­வி­களை நிரப்ப ஜூலை 9ல் தேர்­தல்

1 mins read
692d3538-5b8a-4c2a-bc6a-82bee2a98404
-

சென்னை: தமி­ழ­கத்­தில் உள்­ளாட்சி அமைப்­பு­களில் இன்­னும் நிரப்­பப்­ப­டா­மல் காலி­யாக உள்ள பத­வி­க­ளுக்கு ஜூலை 9ஆம் தேதி இடைத்­தேர்­தல் நடத்­தப்­படும் என மாநி­லத் தேர்­தல் ஆணை­யம் அறி­வித்­துள்­ளது.

இது­தொ­டர்­பாக ஆணை­யம் வெளி­யிட்­டுள்ள செய்­திக் குறிப்­பில், 498 ஊரக உள்­ளாட்­சிப் பத­வி­கள், 12 நகர்ப்­புற உள்­ளாட்சிப் பத­வி­கள் என மொத்­தம் 510 பதவி களுக்கு இடைத்­தேர்­தல் நடை­பெற உள்­ளது.

தேர்­த­லுக்­கான அறி­விப்பு இன்று 20ஆம் தேதி வெளி­யி­டப்­படும் என்­றும் வேட்­பு­ம­னுத் தாக்­க­லும் இன்றே தொடங்­கப்­படும் என்­றும் கூறப்­பட்­டுள்­ளது.

அத­னைத் தொடர்ந்து ஜூலை 9ஆம் தேதி வாக்­குப்­ப­திவு நடத்­தப்­பட்டு, ஜூலை 12ஆம் தேதி வாக்கு எண்­ணப்­படும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், அதி­முக தலை­வர்­க­ளுக்கு இடையே, நீயா நானா போட்டி எழுந்­துள்­ள­தால், இந்த தேர்­த­லில் அதி­முக போட்­டி­யி­டுமா? வேட்­பா­ளர்­க­ளுக்கு இரட்டை இலைச் சின்­னத்­தில் போட்­டி­யிட வாய்ப்பு கிடைக்­குமா? என்ற கேள்வி எழுந்­துள்­ளது.