சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 100 படுக்கைகளைத் தயார் நிலையில் வைத்திருக்கும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் செந்தில்குமார் அறிவுறுத்தி உள்ளார்.
லேசான அறிகுறிகள் இருந்தால் பாரசிட்டமால், சிங்க், வைட்டமின் சி மாத்திரைகளை வழங்கி தனிமைப்படுத்தவேண்டும் என்றும் வீட்டுத் தனிமையில் இருப்பவர்களின் உயிர்வாயு அளவை ஆக்சிமீட்டர் மூலம் பரிசோதிக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், வீட்டுத் தனிமையில் உள்ளவர்களைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தினசரி கண்காணிக்கவேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி யைப் பின்பற்றுதல் அவசியம் என் றும் செந்தில்குமார் கூறியுள்ளார்.
தலைநகர் சென்னையில் மட்டும் 295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 589ல் இருந்து 596 ஆக அதிகரித் துள்ளது.
இதன்மூலம் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 60 ஆயிரத்து 182 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு இல்லை.

