சென்னை: முதல்வர் மு.க. ஸ்டாலி னுக்கு உடல்நிலை சரியில்லை என்றும் மருத்துவர்கள் அறிவுரைப்படி அவர் வீட்டில் ஓய்வெடுத்து வருவதாகவும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் நடைபெற்ற 'மகுடம் மறுத்த மாமன்னன்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் கலந்து கொள்ளவில்லை. நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் செல்வராகவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய துரைமுருகன், சளி பிடித்துள்ளது போன்ற உடல்நல பாதிப்புகளால் திரு ஸ்டாலின் ஓய்வில் உள்ளதாகவும் மருத்துவர்கள் அறிவுறுத்தலால் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்றும் கூறினார்.
இதனிடையே, இன்றும் நாளை யும் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்படுவதாகவும் தகவல்கள் கூறின.

