ஆத­ரவு: ஈபி­எஸ்-64 பேர், ஓபி­எஸ்-11 பேர்

ஆத­ரவு: ஈபி­எஸ்-64 பேர், ஓபி­எஸ்-11 பேர்

1 mins read
8431d57e-84e1-401b-aa7e-65c01ae0490e
-

செங்­கல்­பட்டு: ஒற்­றைத் தலைமை விவ­கா­ரத்­தால் கடந்த ஐந்து நாள்­க­ளாக அதி­மு­க­வில் பர­ப­ரப்­பான காட்­சி­கள் நடந்துகொண்­டி­ருக்­கும் நிலை­யில், யாருக்கு யார் ஆத­ரவு, நடு­நிலை வகிப்­ப­வர்­கள் யார் என்­பது குறித்த கேள்வி எழுந்­துள்­ளது.

இது­கு­றித்து அதி­முக வட்­டா­ரங்­களில் கிடைத்த தக­வல்:

முன்­னாள் எம்பி மைத்­ரே­யன், முன்­னாள் அமைச்­சர்­கள் வைத்திலிங்­கம், வெல்­ல­மண்டி நட­ரா­ஜன், எம்சி சம்­பத் ஆகி­யோர் தற்­போதுவரை ஓ.பன்­னீர்­செல்­வத்­துக்கு ஆத­ர­வாக இருப்­ப­தாக கட்சி வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

முன்­னாள் அமைச்­சர்­கள் நத்­தம் விஸ்­வ­நா­தன், திண்­டுக்­கல் சீனி­வா­சன், செங்­கோட்­டை­யன், செல்­லூர் ராஜு, தங்­க­மணி, எஸ்.பி. வேலு­மணி, ஜெயக்­கு­மார், சி.வி. சண்­மு­கம், அன்­ப­ழ­கன், கருப்­பண்­ணன், காம­ராஜ், உடு­மலை ராதா­கி­ருஷ்­ணன், சி.விஜ­ய­பாஸ்­கர், அமைப்­புச் செய­லா­ளர் பொன்­னை­யன், கடம்­பூர் ராஜு, ஆர்.பி. உத­ய­கு­மார், வீர­மணி, ராஜேந்­திர பாலாஜி, வளர்­மதி ஆகி­யோர் பழ­னி­சா­மிக்கு ஆத­ர­வாக அணி வகுப்­ப­தாக கட்­சித் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

தற்­போது வரை ஓ.எஸ். மணி­யன் எந்த அணி­யி­லும் இல்­லா­மல் நடு­நிலை வகித்து வரு­கி­றார்.

மாவட்­டச் செய­லா­ளர்­கள் 75 பேரில் 64 பேர் எடப்­பாடி பழ­னி­சா­மிக்­கும் 11 பேர் ஓ.பன்­னீர்­செல்­வத்­துக்­கும் ஆத­ரவு நிலை வகிப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.