பொள்ளாச்சி: "மத்திய அரசின் திட்டங்களை காப்பியடித்து, அதற்கு புதிய பெயர் வைப்பதில், திமுக சிறந்து விளங்குகிறது,'' என பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். பொள்ளாச்சியில் நடந்த கோவை தெற்கு மாவட்ட பா.ஜ., மாநாட்டில் கலந்துகொண்டு அவர் பேசினார். "இல்லம் தேடி கல்வி திட்டம் மத்திய அரசு துவங்கி,800 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது. ஆனால் மத்திய அரசு திட்டத்துக்கு திமுக பெயர் வைக்கிறது. மத்திய அரசின் திட்டங்களை காப்பியடித்து, அதற்கு புதிய பெயர் வைப்பதில் திமுக சிறந்து விளங்குகிறது.
"பிரதமர் மோடி கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இதையறிந்து கச்சத்தீவை மீட்போம் என, திமுக நாடகமாடு கிறது. உலகின் படைகளில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இதை முதல் இடத்துக்கு கொண்டு வரத்தான் அக்னிபத் திட்டம். பல பாதுகாப்பு படைப் பிரிவுகளில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
"பொள்ளாச்சியில் இருந்து ஒரு நாளைக்கு 7,000 லோடு மண்ணை ஒரு தனியார் நிறுவனம் கேரளாவுக்கு கடத்துகிறது," என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

