பாலியல் வழக்குகள் கூடின

சென்னை: தமி­ழ­கத்­தில் பெண்­கள், சிறு­மி­க­ளுக்கு எதி­ரான பாலி­யல் தொந்­த­ரவு, கற்­ப­ழிப்பு, கடத்­தல் போன்ற சம்­ப­வங்­கள் தொடர்­பான வழக்­கு­கள் அதி­க­ரித்­துள்­ளன.

இவ்­வாண்டு ஜன­வரி முதல் ஏப்ரல் வரை­யிலான காலகட்டத்துடன் கடந்த ஆண்டின் இதே காலக்­கட்­டத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் குறிப்­பாக பாலி­யல் தொடர்­பான வழக்­கு­கள் கூடு­த­லாக பதி­வாகி இருப்­ப­தாக காவல்­துறை தெரி­வித்­தது.

சென்ற ஆண்டு இந்த 4 மாதங்­களில் கற்­ப­ழிப்பு தொடர்­பாக 137 வழக்கு பதி­வா­னது. இவ்­வாண்டு இந்த எண்­ணிக்கை 148ஆக அதி கரித்­துள்­ளது.

பாலி­யல் தொந்­த­ரவு தொடர்­பான வழக்­கு­கள் 307லிருந்து 407க்கும் பாலி­யல் துன்­பு­றுத்­தல் தொடர்­பான வழக்­கு­கள் 13லிருந்து 20க்கும் கூடி­யுள்­ளது.

'போக்சோ' வழக்­கு­க­ளின் எண்­ணிக்கை கடந்த ஆண்­டை­விட இந்த ஆண்டு அதி­க­ரித்து உள்­ளது. இது 879லிருந்து 1,060ஆக கூடி­யது.

பெண்­க­ளி­டையே காவல்­துறை மேற்­கொண்ட விழிப்­பு­ணர்வு கார­ண­மாக இது­போன்ற வழக்­கு­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்து உள்­ள­தாக காவல்­துறை டிஜிபி சைலேந்­திர பாபு தெரி­வித்­துள்­ளார்.

"இதுபோன்ற சம்­ப­வங்­கள் தொடர்­பாக புகார் கொடுக்க பெண்­கள் தயங்­கி­னார்­கள். ஆனால் இப்­போது அவர்­க­ளுக்­காக காவல் உதவி எனும் கைபேசி செயலி தொடங்­க­பட்டு உள்­ளது. மாநி­லம் முழு­வ­தும் பள்ளி, கல்­லூ­ரி­களில் பெண்­க­ளுக்கு எதி­ரான பாலி­யல் வன்­கொ­டுமை குறித்து காவல் துறை­யி­னர் விழிப்­பு­ணர்வு ஏற் படுத்தி வரு­கின்­ற­னர். இதற்­காக ஏ.டி.ஜி.பி. வன்­னி­ய­பெ­ரு­மாள் தலை­மை­யில் தனிக்­குழு அமைக்­கப்­பட்டு உள்­ளது. காவல்­துறை மீது நம்­பிக்கை ஏற்­பட்­டுள்ள பெண்­கள் தங்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட கொடு­மை­கள் குறித்து துணிந்து புகார் அளிக்­கின்­ற­னர்," என்­றார் அவர்.

கடந்த மே 1ஆம் தேதி வரை பெண்­கள் உதவி எண் 181 மூலம் 11,778 அழைப்­பு­களும் குழந்­தை­கள் உதவி எண் 1998 மூலம் 39,758 அழைப்­பு­களும் 'காவ­லன் செயலி' மூலம் 15,246 புகார்­களும் வந்­துள்­ளன. இவை அனைத்­தும் பதிவு செய்­யப்­பட்டு உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது.

இணை­யம் வழி குற்­றச்­செ­யல்­கள் தொடர்­பாக 6,000 புகார்­கள் வந்­த­தாக திரு சைலேந்­திர பாபு குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!