ஜெயக்குமார்: யார் பக்கமும் இல்லை

சென்னை: அதி­முக மூத்த தலை­வர்­களில் ஒரு­வ­ரும் முன்­னாள் அமைச்­ச­ரு­மான ஜெயக்­கு­மார், ஒற்றை தலைமை விவ­கா­ரத்­தில் ஓ.பன்­னீர்­செல்­வம் பக்­கமோ, எடப்­பாடி பழ­னி­சாமி பக்­கமோ தான் இல்லை என்று கூறி­யுள்­ளார்.

அண்­மை­யில் நடந்த அதி­முக மாவட்ட செய­லர்­கள் ஆலோ­ச­னைக் கூட்­டத்­தில் ஒற்றை தலைமை குறித்து விவா­திக்­கப்­பட்­ட­தாக முன்­னாள் அமைச்­சர் ஜெயக்­கு­மார் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.

அதன் பிறகு கடந்த ஒரு வார­மாக அதி­மு­க­வில் ஒற்றை தலைமை விவ­கா­ரம் விசு­வ­ரூ­பம் எடுத்­து வருகிறது.

கட்­சி­யின் ஒருங்­கி­ணைப்­பா­ளர் ஓ.பன்­னீர்­செல்­வம் ஒரு பக்­க­மும் இணை ஒருங்­கி­ணைப்­பா­ளர் எடப்­பாடி பழ­னி­சாமி மற்­றொரு பக்­க­மும் தங்­க­ளின் நிலையை வலுப்­ப­டுத்தி வரு­கின்­ற­னர்.

ஜெயக்­கு­மார் வெளிப்­ப­டை­யாக பேசி­ய­தால்­தான் இந்­தப் பிரச்­சினை ஆரம்­ப­மா­னது என்று ஓபி­எஸ் தரப்­பில் குற்­றம் சாட்­டப்­ப­டு­கிறது.

வரும் ஜூன் 23ஆம் தேதி வானகரத்தில் நடை­பெ­றும் அதிமுக பொதுக்­குழு கூட்­டத்­தில் ஒற்றை தலைமை குறித்த தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­படும் என்று எதிர்­பார்க்­கப் ­ப­டு­கிறது. இத­னால், ஓபி­எஸ்-இபி­எஸ் தரப்­பி­ன­ரி­டைேய மோதல் முற்றியிருக்கிறது.

இதற்­கி­டையே நேற்று ெஜயக்­கு­மார் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­தார்.

அப்­போது, தான் ஒற்றை தலைமை என்று மட்­டுமே குறிப்­பிட்­ட­தா­க­வும் அதில் எந்­த­வித உள்­நோக்­க­மும் இல்லை என்­றும் கூறி­யுள்­ளார். "ஒற்றை தலைமை விவ­கா­ரத்­தில் சுமூக முடிவு காணப்­படும். நான், பன்­னீர்­செல்­வம் பக்­க­மும் இல்லை, எடப்­பாடி பழ­னி­சாமி பக்­க­மும் இல்லை. அதி­முக பொதுக்­குழு திட்­ட­மிட்­ட­படி நடை­பெ­றும்.

"ஒற்றை தலைமை குறித்து பொதுக்­கு­ழுவு முடிவு ெசய்யும். அதி­மு­க­வில் பன்­னீர்­செல்­வத்தை ஓரம்கட்­டும் எண்­ண­ம் இல்லை," என்று ஜெயக்குமார் தெரி­வித்­தார்.

இதற்கிடையே அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்­பாக முன்­னாள் அமைச்­ச­ரும் திரு­வள்­ளூர் மத்­திய மாவட்ட அதி­முக செய­லா­ள­ரு­மான பி.பெஞ்­ச­மின் தாக்­கல் செய்­துள்ள மனு­வில் வரும் 23ஆம் தேதி வான­க­ரத்­தில் நடை­பெ­ற­வுள்ள அதி முக பொதுக்­கூட்­டத்­தில் முன்­னாள் முத­ல­மைச்­சர்­கள், எம்.பி., எம்.எல்.ஏக்­கள், பொதுக்­குழு, செயற்­குழு உறுப்­பி­னர்­கள் என 2,500க்கும் மேற்­பட்­டோர் கலந்து கொள்­வ­தால் காவல்­துறை பாது­காப்பு அவ­சி­யம் என­வும் போக்­கு­வ­ரத்­தும் ஒழுங்கு படுத்­தப்­பட வேண்­டு­மெ­ன­வும் தெரிவிக்­கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!