ஒன்பது லட்சம் பேரில் தமிழ்ப் பாடத்தில் ஒரே ஒரு மாணவி நூற்றுக்கு நூறு பெற்று சாதனை

ஒன்பது லட்சம் பேரில் தமிழ்ப் பாடத்தில் ஒரே ஒரு மாணவி நூற்றுக்கு நூறு பெற்று சாதனை

2 mins read
d7dc15ae-1251-49af-949b-7d762ffd0cf0
பெற்றோர், ஆசிரிய ருடன் பத்தாம் வகுப்புத் தமிழ்த் தேர்வில் 100/100 மதிப்பெண் பெற்ற துர்கா. படம்: ஊடகம் -

தூத்­துக்­குடி: பத்­தாம் வகுப்பு பொதுத்தேர்­வில் தமிழ்ப் பாடத்­தில் ஒரே ஒரு மாணவி நூற்­றுக்கு 100 மதிப்­பெண்­களை எடுத்து சாதனை படைத்­துள்­ளார்.

"நூற்­றுக்கு நூறு மதிப்­பெண் களைப் பெறு­வது முடியாத காரியம். அதற்­கான வாய்ப்­பு­கள் மிகவும் அரிதுதான்," எனக் கூறப்­படும் தமிழ்ப் பாடத்­தில், ஒன்­பது லட்­சம் பேரில் தனி­யொரு மாண­வி­யாக நூற்­றுக்கு நூறு மதிப்­பெண்க­ளு­டன் தேர்ச்சி பெற்றுள்ளார் துர்­கா­.

சமூக வலைத்­த­ளங்­களில் பர­பரப்பாகப் பேசப்­பட்டு வரும் துர்கா, விவ­சா­யம் பற்றி படிப்­பதே தனது எதிர்கால லட்சியம் என்கிறார்.

பத்­தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடி­வு­கள் கடந்த திங்­க­ளன்று வெளி­யி­டப்­பட்­டன.

இதில், அதி­க­பட்­ச­மாக அறி­விய லில் 3,841 மாண­வர்­களும் கணி தத்­தில் 2,186 மாண­வர்­களும் சமூக அறி­வி­ய­லில் 1,009 மாண­வர்­களும் ஆங்­கி­லத்­தில் 45 மாண­வர்­களும் தமிழ்ப் பாடத்­தில் ஒரே ஒரு மாண வியும் நூற்­றுக்கு நூறு மதிப்­பெண் கள் பெற்று அசத்­தியிருந்தனர்.

தூத்­துக்­குடி மாவட்­டம், ஆறு­மு­க­நேரி காவல்­நி­லை­யத்­தில் பணி­யாற்­றும் தலைமைக் காவலர் செல்­வ­கு­மாரின் மகள் துர்கா. திருச்ெ­சந்­தூர் காஞ்சி சங்­கரா மெட்­ரிக் மேல்­ நி­லைப்பள்­ளி­யில் படித்தவர்.

இது­கு­றித்து ெசய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், "நான் ஆங்­கில மொழி வழி­யில்­தான் பாடங்­க­ளைப் படித்­தேன். எனி­னும், எனக்­குப் பிடித்­த­ பாடம் தமிழ்­தான். ஆங்­கி­ல வழியில் படிக்­கும் மாண­வர்­க­ளுக் குத் தமி­ழில் அதிக ஈடு­பாடு இருக்­காது என்று சொல்­வார்­கள். தமிழ்­ மீதுள்ள ஆர்­வத்தால்தான் நான் 100 மதிப்­பெண்­கள் பெற்றுள்­ளேன்.

"உரை­ந­டை­யை­விட செய்­யுள் கடி­னம் என மாண­வர்­கள் நினைக்­கின்­ற­னர். சினிமா பாடல்­களை மன­தில் பதியவைத்து முணுமுணுப்­பதைப்­போல் செய்­யு­ளில் வரும் மனப்­பாடப் பாடல்­களையும் மன­தில் பதிய வைத்­தால்­போ­தும். வெற்றி நிச்­ச­யம்," என்­கி­றார் துர்கா.