சேலம்: பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த ரேச்சல் ஆனி மேரி என்ற பெண் பொறியாளர் ஒருவர், சேலம் அருகே ரயிலில் இருந்து விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து ரேச்ச லின் கணவரும் மருத்துவருமான ஹரிசிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி ரயில்வே காவல்துறையினர் ரேச்சலின் உடலை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு நேற்று அனுப்பிவைத்தனர்.
இச்சம்பவம் குறித்து பிலிப்பீன்ஸ் தூதரகத்திற்கும் அந்நாட்டில் வசிக்கும் ரேச்சலின் சகோதரிக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஸ். இவர் கர்நாடக மாநிலம், பெங்களூருவில் ஒரு தனியார் ஆயுர்வேத மருத்துவ நிறுவனத்தில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார்.
ரேச்சல், 35, ஹரிஷ், 48, இரு வரும் கடந்த மூன்றாண்டுகளாக சமூக வலைத்தளம் மூலம் அறிமுக மாகி காதலித்து வந்தனர்்.
இந்நிலையில், கடந்த 10 நாள் களுக்கு முன்பு பிலிப்பீன்சில் இருந்து பெங்களூரு வந்த ரேச்சல், ஹரிசைப் பதிவுத் திருமணம் செய்துகொண்டு பெங்களூருவில் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
அதன்பின்னர், ஹரிசின் சொந்த ஊரான எர்ணாகுளம் செல்ல விரும்புவதாக ரேச்சல் தெரிவித்தார்.
இதையடுத்து, இருவரும் பெங்களூரில் இருந்து சேலம் வழியாக எர்ணாகுளத்துக்கு விரைவு ரயிலில் பயணம் செய்தனர்.
சேலம் மாவட்டம், காருவள்ளி அருகே ரயில் வந்தபோது, ரயிலின் படிக்கட்டில் இருந்து திடீரென ேரச்சல் 50 அடி பள்ளத்தில் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, ஹரிசிடம் நடத்திய விசாரணையில் சில முக்கிய தகவல்கள் தெரியவந்தன.
மருத்துவர் ஹரிசுக்கு ஏற்ெகனவே திருமணமாகி மனைவியும் இரு மகள்களும் உள்ளனர். அவர்கள் எர்ணாகுளத்தில் வசித்து வருகின்றனர். இதனை அவர் ரேச்சலிடம் கூறாமல் மறைத்துவிட்டார்.
அத்துடன், தனது குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல் ரேச்சலை ஹரிஷ் ரகசியமாக பதிவுத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
ஹரிஷின் முதல் மனைவிக்கும் பிலிப்பீன்ஸ் பெண்ணை ஹரிஷ் திருமணம் செய்துகொண்டது தெரியாது என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், எர்ணாகுளம் பய ணத்தின்போது திருமண வாழ்க்கை பற்றி முதல் மனைவியிடமும் குடும்பத்தினரிடமும் எவ்வாறு தெரிவிப்பது என்ற குழப்பத்தில் இருந்த ஹரிஷ், இரண்டாவது மனைவி ரேச்சலை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

