மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர்: தாயும் சேயும் பலி

மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர்: தாயும் சேயும் பலி

1 mins read
ee0a1bb0-fcee-4f17-87c8-53d7363007b1
-

சேலம்: சேலத்தில் பிரசவ வலி ஏற்பட்ட மனை­விைய மருத்துவ மனைக்கு அழைத்துச்செல்லாமல் கணவனே பிர­ச­வம் பார்த்­த­தில், தாய்-சேய் இரு­வ­ரும் உயி­ரி­ழந்­தனர். கணவன் பூப­தி கைது செய்யப்பட்டு, சேலம் மத்­திய சிறை­யில் அடைக்கப்பட்டார்.

சேலம் மாவட்டம், சீல­நா­யக்­கன் பட்­டியைச் சேர்ந்­த­வர் பார்­வதி, 35. இவருக்கு ஏற்­கெ­னவே திரு­ம­ண­மாகி 12 வய­தில் ஒரு மகன் உள்­ள நிலையில், கண­வனை விட்டுப் பிரிந்து தனது மக­னு­டன் தனி­யாக வசித்து வந்­தார்.

இந்­நி­லை­யில், பார்­வ­திக்­கும் ராசி­பு­ரம் பகு­தியைச் சேர்ந்த பூபதி என்ற 25 வயது இளை­ய­ருக்கும் திரு­ம­ணமாகி சீல­நா­யக்­கன்­பட்டி யில் வீடு எடுத்து வசித்து வந்­த­னர். இரு­வ­ரும் கட்டட வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்தி வந்­த­னர். இவர்­க­ளுக்கு 3 வயதில் ஆண், 2 வயதில் பெண் குழந்­தைகள் உள்ளனர்.

இத­னி­டையே, பார்வதி மூன்றா வது முறையாக கர்ப்பமாக இருப்பது தெரியவந்தால் உற­வி­னர்­கள் ஏதா­வது சொல்­வார்­கள் என நினைத்து கண­வன், மனைவி இரு­வ­ரும் உற­வி­னர்­க­ளுக்குத் தெரிவிக்காமல் மறைத்து வந்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில், நேற்று முன்­தினம் எட்டு மாத கர்ப்­பி­ணி­யான பார்­வதிக்கு திடீ­ரென பிர­சவ வலி ஏற்­பட்­டது.

பூபதி, தனது மனை­வியை வீட்டின் அருகில் உள்ள மலையடி­வார கரடு பகு­திக்கு அழைத்துச் சென்­று பிர­ச­வம் பார்த்­ததில் பார்­வதிக்கு பெண் குழந்தை இறந்தே பிறந்த­தாகக் கூறப்­ப­டு­கிறது. குழந்தையைக் குழி­ தோண்டி புதைத்­துள்­ளார். அதன்பின்னர், பார்­வ­திக்­கும் திடீ­ரென வலிப்பு ஏற்­பட்டு அவரும் உயி­ரி­ழந்­தார்.