தேனி: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் பேச்சியம்மாள். இவரது மகன்கள் அழகுராஜா, சிவக்குமார்.
மடிக்கணினியைப் பயன்படுத்துவதில் அண்ணன் தம்பிக்கு இடையே சண்டை ஏற்பட்டது.
தடுக்க வந்த தாயை மரக் கட்டையால் அழகுராஜா தாக்கினார்.
கோபம் அைடந்த பேச்சியம்மாள் அழகுராஜாவை அரிவாளால் தாக்க, சம்பவ இடத்திலேயே அழகுராஜா இறந்தார்.
இந்தச் சம்பவம் 2017 மார்ச்சில் நடந்தது.
இந்த வழக்கு பெரியகுளம் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், பேச்சியம்மாளுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சிங்கராஜ் தீர்ப்பளித்தார்.

