'தமிழகம் 15 ஆண்டுகள் முன்னோக்கிப் பயணிக்கிறது'

2 mins read
8cb9df7a-3257-4982-a1a3-a87f5b71423a
-

புதிய கல்விக்கொள்கை தேவையில்லை என உயர் நீதிமன்றத்தில் அரசு மனுத்தாக்கல்

சென்னை: இந்­திய அள­வில் கல்­வித்­து­றை­யில் தமி­ழ­கம் 15 ஆண்­டு­கள் முன்­னோக்­கிப் பயணித்­துக் கொண்­டி­ருப்­ப­தாக உயர் நீதி­மன்­றத்­தில் தமி­ழக அரசு தெரி­வித்­துள்­ளது.

எனவே தமி­ழ­கத்­துக்கு புதிய தேசிய கல்­விக் கொள்கை அவசியம் இல்லை என்­றும் அரசு தாக்­கல் செய்­துள்ள மனு­வில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

தமி­ழ­கத்­தில் தேசிய கல்­விக் கொள்­கையை அமல்­ப­டுத்­தக் கோரி கட­லூ­ரைச் சேர்ந்த அர்ஜுனன் இளை­ய­ராஜா என்­ப­வர் சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் வழக்கு தொடுத்­துள்­ளார்.

இந்த மனுவை இரு நீதி­ப­தி­கள் கொண்ட அமர்வு நேற்று முன்­தினம் விசா­ரித்­தது.

அப்­போது தமி­ழக அர­சின் தலைமைச் செய­லா­ளர், உயர் கல்வி, பள்­ளிக்­கல்­வித் துறை செய­லா­ளர்­கள் தரப்­பில் பதில் மனு தாக்­கல் செய்­யப்­பட்­டது.

அதில், கல்வி என்­பது மாநிலக் கொள்கை சார்ந்­தது என்­றும் தேசிய கல்­விக் கொள்கை என்­பது எந்­த­வித சட்­டபூர்வ அங்­கீ­கா­ர­மும் இல்­லாத வரைவுக் கொள்­கை­யாக உள்­ளது என்­றும் குறிப்­பி­டப்­பட்டுள்­ளது.

மாண­வர் சேர்க்கை விகி­தத்­தி­லும் கல்­வித் தரத்­தி­லும் இந்­திய அள­வில் தமி­ழ­கம் 15 ஆண்­டு­கள் முன்­னோக்கி சென்று கொண்­டி­ருப்­ப­தா­கக் குறிப்­பிட்­டுள்ள தமி­ழக அரசு, தாய்­மொ­ழிக் கல்வி மிக முக்­கி­யம் எனச் சுட்­டிக்­காட்டி உள்­ளது.

"தமி­ழ­கத்­தில் நடை­மு­றை­யில் உள்ள 69% இட­ஒ­துக்­கீடு, பெண்­க­ளுக்­கான 33% இட­ஒ­துக்­கீடு, அரசு வேலை­யில் தமி­ழில் படித்­த­வர்­க­ளுக்கு இட­ஒ­துக்­கீடு என அனைத்து தரப்­பி­ன­ரை­யும் ஒருங்­கி­ணைத்து சமத்­து­வ­மான கல்வி என்ற அடித்­த­ளத்தை கொண்டுள்ள மதச்­சார்­பற்ற தமி­ழகத்­தில், இரு மொழிக்­கொள்­கை­யும் தாய்­மொழி­யில் அடிப்­ப­டைக் கல்­வி­யும் முக்­கி­யத்­து­வம் வாய்ந்­தது," என்று தமி­ழக அர­சின் பதில் மனு­வில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

தேசிய அள­வில் மொத்த மாண­வர் சேர்க்கை விகி­தத்தை 27.1% என்­ப­தில் இருந்து 2035க்குள் 50 விழுக்­கா­டாக உயர்த்­தும் எண்­ணத்­தில் தேசிய கல்­விக் கொள்கை கொண்டு வரப்­பட்­டுள்­ள­தா­கக் குறிப்­பிட்­டுள்ள தமி­ழக அரசு, தமிழகத்­தில் தர­மான இல­வ­சக்­கல்வி, மதிய உணவு, இல­வச புத்­த­கம், சீருடை, மிதி­வண்டி, காலணி, மடிக்­க­ணினி, கல்வி உத­வித்­தொகை வழங்­கு­வ­தால் மொத்த மாண­வர் சேர்க்கை விகி­தம் தற்­போது 51.4 விழுக்­கா­டாக உள்­ள­தென சுட்­டிக்­காட்டி உள்­ளது.