கோயம்பேடு வியாபாரிகள் அனைவருக்கும் பரிசோதனை

சென்னை: கொரோனா தொற்­று பாதிப்பு மெல்ல அதி­க­ரிப்­ப­தற்­கான அறி­கு­றி­கள் தென்­ப­டு­வ­தை­ய­டுத்து, கோயம்­பேடு சந்­தை­யில் உள்ள அனைத்து வியா­பா­ரி­க­ளுக்­கும் தொழி­லா­ளர்­க­ளுக்­கும் கொரோனா பரி­சோ­தனை நடத்த முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

முன்­ன­தாக சந்­தை­யில் கடைப்­பி­டிக்­கப்­பட வேண்­டிய கொரோனா கட்­டுப்­பா­டு­களை அறி­வித்து, அவை முறை­யா­கப் பின்­பற்­றப்­படு­கின்­ற­னவா என கோயம்­பேடு அங்காடி நிர்­வா­கக் குழு கண்­கா­ணித்து வரு­கிறது.

கோயம்­பேடு சந்­தை­யில் சுமார் நான்­கா­யி­ரம் கடை­கள் உள்­ளன. அவற்­றில் காய்­கறி, பழம், பூ, மளிகைப் பொருள்கள் மொத்­த­மா­க­வும் சில்­ல­றை­யா­க­வும் விற்­கப்­ப­டு­கின்­றன. தமி­ழ­கத்­தின் பல்­வேறு மாவட்­டங்­களில் இருந்தும் ஆந்திரா, தெலுங்­கானா, கர்­நா­டகா, கேரளா, உத்­தி­ரப் பிர­தே­சம், மகா­ராஷ்­டிரா உள்­ளிட்ட பல மாநிலங்­களில் இருந்­தும் தின­மும் இந்­தப் பொருள்­கள் சந்­தைக்கு வரு­கின்­றன.

கொரோனா தொற்­றுப் பர­வல் உச்­சத்­தில் இருந்­த­போது கோயம்­பேடு சந்­தை­யில் ஏரா­ள­மான வியா­பா­ரி­களும் தொழிலாளர்­களும் தொற்­றுக்கு ஆளா­கி­னர். அவர்­கள் மூலம் சந்­தைக்கு வந்த பொது­மக்­க­ளுக்­கும் தொற்று பர­வி­யது.

இதை­ய­டுத்து அந்­தச் சந்தை ஐந்து மாதங்­க­ளுக்கு மூடப்­பட்­டது.

இம்­முறை அத்­த­கைய நிலை ஏற்­படக்­கூ­டாது என்­ப­தற்­காக முன்­னெச்­சரிக்கை நட­வ­டிக்­கை­யாக சந்தை வியா­பா­ரி­க­ளுக்கு பரி­சோ­தனை நடத்­தப்­படு­வ­தாக சென்னை மாந­க­ராட்­சி­யின் மண்­டல சுகா­தார அதி­காரி கோபால கிருஷ்­ணன் தெரி­வித்­துள்­ளார்.

தின­மும் இரு­நூறு பேருக்கு பரி­சோ­தனை நடத்­தப்­ப­டு­வ­தாக அவர் கூறி­னார். மேலும், முகக்­க­வ­சம் அணி­வது, கடை முன்பு கிரு­மி­நா­சினி வைப்­பது, சமூக இடை­வெ­ளி­யைக் கடைப்­பி­டிப்­பது உள்­ளிட்ட பாது­காப்பு நடை­மு­றை­களை வியா­பா­ரி­கள் பின்­பற்ற வேண்­டும் என்று ஒலிபெருக்கி மூலம் விழிப்­பு­ணர்வு பிர­சா­ரம் செய்­யப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!