தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இரண்டாவது முறையாக இலங்கைக்கு 15,000 மெட்ரிக் டன் அத்தியாவசியப் பொருள்களை அனுப்பியது தமிழகம்

1 mins read
7b2a1176-709c-40fb-aef9-7dac2b91a1b9
தமிழக அரசு அனுப்பிய பொருள்கள் அடங்கிய மூட்டைகளில் ஒன்று. படம்: தமிழக தகவல் ஊடகம் -

தூத்­துக்­குடி: பொரு­ளி­யல் நெருக்­க­டி­யில் சிக்­கித் தவிக்­கும் இலங்­கைக்கு தமி­ழக மக்­க­ளின் சார்­பில் இரண்­டா­வது முறை­யாக அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­கள் அனுப்பி வைக்­கப்­பட்­டன. இம்­முறை 15,000 மெட்­ரிக் டன் பொருள்­கள் அனுப்பி வைக்­கப்­பட்­ட­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

முன்­ன­தாக, கடந்த மே மாதம் 18ஆம் தேதி ரூ.30 கோடி மதிப்­பிலான அரசி, ஆவின் பால் பவு­டர், அத்­தி­யா­வ­சிய மருந்­துப் பொருள்­கள் அனுப்­பப்­பட்­டன.

இதை­ய­டுத்து நேற்று இரண்­டாம் கட்­ட­மாக மேலும் பல பொருள்­கள் அனுப்பி வைக்­கப்­பட்­ட­தா­க­வும் அவற்­றின் மதிப்பு ரூ.67.70 கோடி என்­றும் ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

நேற்று தூத்­துக்­குடி துறை­மு­கத்­தில் இருந்து சரக்கு கப்­பல் மூலம் இப்­பொ­ருள்­கள் அனுப்பி வைக்­கப்­பட்­டன.

இம்­முறை உயிர்­காக்­கும் மருந்­துப் பொருள்­கள், பால்­ப­வு­டர், 14,172 டன் அரிசி ஆகி­யவை இந்த உதவித்­தொகுப்­பில் இடம்­பெற்­றுள்­ளன.

இலங்கை செல்லும் கப்பலை சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.