சேலம்: தமிழகத்தில் 709 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் விரைவில் தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், மல்லியக் கரையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தின் புற நோயாளிகள் பிரிவின் கட்டடத் திறப்பு விழாவில் கலந்துெகாண்ட அமைச்சர், நகர்ப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் நவீன உபகரணங்களுடன் கூடிய புதிய ஆய்வகம் கட்டப்படும் என்று கூறினார்.
"தமிழ்நாட்டில் ஒரே நேரத்தில் 709 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படுவது இதுவே முதல்முறை.
"வீடுகளுக்கே தேடிச் சென்று மருத்துவம் பார்க்கும் திட்டமான 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டம் தமிழகத்தில் மட்டும்தான் செயல்படுத்தப்படுகிறது.
"காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கத்தில் 18 காசநோய் தடுப்பு வாகனங்கள் குக்கிரா மங்களுக்குச் சென்று மருத்துவம் பார்க்கும் திட்டத்தை வரும் 1ஆம் ேததி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளார்,'' என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

