ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 13 பேர் கைது

ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 13 பேர் கைது

1 mins read
42831114-e17a-46f3-ad93-29df34d62055
-

மத்திய அரசின் 'அக்னி பாதை' திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 13 பேரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். சென்னை கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்துக்கு வரும் ரயிலை மறிப்பதற்காகச் சென்றவர்கள் அரசுக்கு எதிராக முழக்கமிட்டபடி ஊர்வலமாகச் சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் 13 பேரைக் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.

படம்: ஏஎஃப்பி