பட்டாசு ஆலையில் வெடி விபத்து: மூவர் உயிரிழப்பு

பட்டாசு ஆலையில் வெடி விபத்து: மூவர் உயிரிழப்பு

1 mins read
b42fcdbc-9abe-40af-bc75-2c023963502f
-

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் உள்ள எம்.புதூரில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் அங்கு பணி புரிந்துகொண்டிருந்த மூவர் உயிரிழந்தனர். மூவர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் பட்டாசு வாங்க வந்த ஒருவரும் அடங்குவார். இவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து கடலூர் திருப்பாதிரி புலியூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கடலூரில் உள்ள எம். புதூர் கிராமத்தில் வனிதா மோகன்ராஜ் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் நேற்று மதியம் பட்டாசு தயாரிக்கும் ஒரு குடோன் திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்து தரைமட்டமானது. அப்போது பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்த சித்ரா, 35, அம்பிகா, 50, சத்தியராஜ், 34, ஆகியோர் படுகாயம் அடைந்து உயிரிழந்தனர்.