மாயமான மாணவனின் சடலம் மீட்பு

மாயமான மாணவனின் சடலம் மீட்பு

1 mins read
5a716055-9658-4a8c-b3b8-bbcc9a111994
-

தேனி: தேனி மாவட்­டத்­தில் மாய­மான பள்ளி மாண­வனை நண்­பர்­களே கொலை செய்து கிணற்­றில் வீசி­யது விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ளது.

உத்­த­ம­பா­ளை­யத்­தைச் சேர்ந்த மாத­வன், 16, என்ற மாண­வன் கடந்த 18ஆம் தேதி நண்­பர்­க­ளு­டன் விளை­யாடச் சென்ற நிலை­யில் வீடு திரும்­ப­வில்லை.

மாண­வனைத் தேடி வந்த காவலர்கள், பாழ­டைந்த கிணற்­றில் இருந்து சட­ல­மாக மீட்­ட­னர். மாண­வ­னின் நண்­பர்­க­ளான 17 வயது சிறு­வர்­கள் இரு­வ­ரை­யும் அல்லா பிச்சை என்ற இளை­ஞ­ரை­யும் பிடித்து விசா­ரித்­த­னர்.

அப்­போது, அவர்­கள் கஞ்சா வாங்­கிக் கொடுக்­கச் சொல்லி மாத­வ­னி­டம் ரூ.1,000 கொடுத்­த­தா­க­வும் மாத­வன் கஞ்சா வாங்­கிக் கொடுக்­கா­த­தால் ஆத்­தி­ரத்­தில் கொலை செய்­த­தா­க­வும் வாக்கு­மூ­லம் அளித்­துள்­ள­னர்.