மணமகள் தேவை: சுவரொட்டி ஒட்டி பெண் தேடிய ஆடவர்

மதுரை: கடந்த நான்கு ஆண்டு களா­கத் தனக்­கேற்ற ஒரு வரனை மது­ரை­யைச் சேர்ந்த ஜெகன் என்ற இளை­ஞர் தேடி வரு­கி­றார்.

ஆனால், இன்­னும் எந்த ஒரு பெண்­ணும் பொருத்தமாக அமை யாத­தால், மதுரை மாந­க­ர், அதன் புற­ந­கர்ப் பகுதி, திண்­டுக்கல் மாவட்­டம் உள்­ளிட்ட பகுதிகளில் உள்ள சுவர்­களில் ‘மணமகள் தேவை’ என சுவ­ரொட்டி ஒட்டி பெண் தேடி வருகிறார்.

மதுரை, வில்­லா­பு­ரம் பகுதியைச் சேர்ந்­த­வர் ஜெகன், 27. இவர், இளங்­கலை அறி­வி­யல் பட்­டப்­படிப்பை முடித்­து­விட்டு, மேலா­ள­ரா­கப் பணி­பு­ரிந்து வரு­கி­றார்.

மாதம் ரூ.40,000 சம்­பா­திக்கிறார். சொந்­த­மாக நில­மும் வைத்­துள்­ளார். இவர் தனக்கேற்ற பெண்ணை நான்கு ஆண்­டு­ களா­கத் தேடி வரும் நிலை­யில், சுவ­ரொட்டி ஒட்டி பெண் தேடும் பட­லத்­தைத் துவங்கி உள்­ளார்.

இது­கு­றித்து ஜெகன் கூறு­கை­யில், “நான் தனி­யார் நிறு­வ­னத்­தில் மேலா­ள­ரா­க­வும் பகுதி நேர மாக பிரி­யாணி கடை­யிலும் மதுரை பப்­ளி­சிட்டி என்ற நிறு­வனத்­தில் சுவ­ரொட்டி ஒட்­டும் பணி­யிலும் ஈடுபட்டு வரு­கி­றேன்.

“பல­ருக்­கா­க­வும் சுவ­ரொட்டி அடித்து ஒட்­டும் நான், ஏன் எனக்­காக சுவ­ரொட்டி அடித்து ஒட்­டக்­கூடாது என்று யோசித்­தேன். அதன்­படி, எனக்­கான துணை­வி­யைத் தேடி சுவ­ரொட்டி ஒட்­டி­யுள்­ளேன். இத­னைப் பார்த்து யார் கேலி, கிண்­டல் செய்தாலும் கண்டு­கொள்­ள­ வி­ரும்­ப­வில்லை.

“பெண் பார்க்­கும் தர­கர்­கள் ஜாத­கம், பணத்­தை வாங்­கிச் செல்­வார்­கள். ஆனால், ஒரு பெண்­ணைக் கூட கண்ணில் காண்­பிக்க மாட்­டார்­கள். சுவ­ரொட்­டி­யைப் பார்த்து பெண்­கள் தொடர்பு கொள்­வார்­கள் என்று நினைத்தால், மீண்­டும் தர­கர்­களே தொடர்பு கொள்­கி­றார்­கள்,” என வருந்து கிறார் ஜெகன்.

மதுரை மாந­க­ரி­லும் அதன் புற­ந­கர்ப் பகுதி, திண்­டுக்கல் மாவட்­டம் உள்­ளிட்ட பகுதிகளிலும் மணமகள் தேவை என சுவ­ரொட்டி ஒட்டி பெண் தேடும் ஜெகன்.

படம்: ஊடகம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!