தமிழகத்தில் மீண்டும் ஆயிரத்தைக் கடந்தது பாதிப்பு

தமிழகத்தில் மீண்டும் ஆயிரத்தைக் கடந்தது பாதிப்பு

2 mins read
0b13391a-cbac-4a50-8a85-5630cb0f5596
-

சென்னை: தமி­ழ­கத்­தில் கடந்த சில நாட்­க­ளாக கொவிட்-19 பாதிப்பு அதி­க­ரித்து வரு­ம் நிலை யில், தின­சரி பாதிப்பு 1,000ஐ கடந்­தது. இது முந்­தைய நாள் பாதிப்பை விட 292 அதி­கம். சென்­னை­யில் மட்டும் தொற்று பாதிப்பு 500ஐ நெருங்­கி­யது. கடந்த 24 மணி நேரத்­தில் எந்த மாவட்­டத்­தி­லும் இறப்பு பதி­வா­க­வில்லை.

இதுகுறித்து சுகாதாரத் ­துறை வெளி­யிட்டுள்ள அறிக்­கை­யில், கடந்த 24 மணி நேரத்­தில் 1,063 பேர் கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். சென்­னை­யில் 497 பேருக்கும் செங்­கல்­பட்டில் 190 பேருக்­கும் பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளதாகவும் தெரி­வித்து உள்ளது.

மாநிலம் முழு­வ­தும் கொரோ­னா­விற்கு 5,174 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகா­தா­ரத்­துறை தெரி­வித்­துள்­ளது.

இந்நிலையில், கொவிட்-19 கிருமிப் பர­வல் அதி­க­ரித்து வரு­வ­தன் எதிரொலியாக தமி­ழ­கத்­தில் அனைத்து அலுவ­லர்­க­ளும் முகக் ­க­வ­சம் கட்­டா­யம் அணி­ய­வேண்­டும் என நேற்றுமுதல் (24ஆம் தேதி) அரசு உத்­த­ர­விட்­டுள்­ளது.

வேலூர், காஞ்­சி­பு­ரம், திரு­வா­ரூர் ஆகிய மாவட்­டங்­களில் முகக் கவ­சம் அணி­வது மீண்­டும் கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது.

இதனிடையே, தமிழ்நாட்டில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப் படுமா என்ற சந்தேகத்திற்கு செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

"கொரோனா அதிகரித்தாலும் தமிழ்நாட்டில் தற்போதைக்கு புதிய கட்டுப்பாடுகள் இல்லை," என்று அவர் தெரிவித்தார்.

"மீண்டும் சென்னை கிங்ஸ் மருத்துவமனையை கொரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையாக மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது பரவி வரும் ஓமிக்ரான் பி-ஏ-4, பி-ஏ-5 வகை கொரோனா உயிர்க்கொல்லியாக இல்லாமல், வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாக உள்ளது," என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.