தெருக்களில் குப்பையைக் கண்டுபிடித்து எடுத்தால் ரூ.500 பரிசளிப்பதாக அறிவிப்பு

தெருக்களில் குப்பையைக் கண்டுபிடித்து எடுத்தால் ரூ.500 பரிசளிப்பதாக அறிவிப்பு

2 mins read
b8f4d2f2-13be-4fa7-beec-4e77492f0725
கவுன்­சி­லர் சாதிக். படம்: ஊடகம் -

கம்பம்: தனது வார்­டில் உள்ள எந்த ஒரு தெருவிலும் குப்பை என்பதே இல்லாத அளவுக்கு சுத்­த­மாக வைத்­துள்­ளோம் என்கிறார் சாதிக். அதையும் மீறி, யார் ஒரு­வர் சிறிய குப்­பை­யைத் தேடி எடுத்தாலும்கூட அவர்களுக்கு ரூ.500 உடனடியாக பரிசாக வழங்­கப்­படும் என இவர் பகி­ரங்­க­மாக சவால் விடுத்­துள்­ளார்.

தேனி மாவட்­டம், கம்­பம் நக­ராட்­சி­யில் உள்ள 11வது வார்­டில் கவுன்­சி­ல­ராக இருப்­ப­வர் சாதிக், 40. இவர், தனது வார்­டில் குப்பை சேக­ரிப்பு மேலாண்மை பணி­யினைச் செய்து வரு­கி­றார்.

கழி­வு­நீர் தேங்கி நிற்காமல் சாக்­கடையைத் தூர்­வா­று­தல், மரக்­கன்­று­கள் நடு­தல், பூங்­காக்­கள் அமைத்­தல் உள்ளிட்ட பொது இடங்­களை சுத்­தப்படுத்தும் பல்­வேறு பணி­களை­யும் இவர் செய்து வரு­கி­றார்.

இதுகுறித்து சாதிக் கூறுகையில், "எனது வார்­டில் 85 விழுக்­காட்­டி­னர் முஸ்­லிம் மக்­களும் 15 விழுக்­காட்­டி­னர் இதர மக்­களும் வசிக்­கின்­ற­னர்.

"நான் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரில் சென்று தெரு­வில் குப்பை போடா­தீர்­கள், துப்­பு­ரவுப் பணி­யா­ளர்கள் வந்து சேக­ரித்­துக் கொள் வார்­கள் என அறி­வு­றுத்­தி­னேன்.

"அதன்படி எனது வார்­டில் உள்ள யாரும் தெரு­வில் குப்­பை­யைக் கொட்­டு­வ­தில்லை. துப்­பு­ர­வுப் பணி­யா­ளர்­களும் காலை, மாலை என இரு­வே­ளை­க­ளி­லும் குப்­பை­யைச் சேக­ரித்து தெருக்­க­ளை­யும் கூட்டி சுத்­தம் செய்­கின்­ற­னர். இதனால், எனது வார்­டில் உள்ள தெருக்­களில் ஒரு குப்­பை­யைக்கூட பார்க்க முடி­ யாது. அப்­படி யாரா­வது குப்பையை எடுத்­தால், எடுத்த இடத்­தி­லேயே 500 ரூபாய் பரிசு வழங்கப்படும். இந்த அறிவிப்புக்கு வார்டு மக்­களும் துப்­பு­ரவுப் பணி­யா­ளர்­களும் தான் கார­ணம்," என்கிறார்.