ஐந்து கிராம மக்கள் திரண்டு வந்து வாழ்த்திய திருமணம்
திருவிடைமருதூர்: தஞ்சை அருகே ஊராட்சி மன்றத் தலைவர் ஒருவர் தனது ஊராட்சியில் உள்ள 900 குடும்பங் களின் பெயர்களையும் அழைப்பிதழில் அச்சடித்து தனது மகளின் திருமணத்தை நடத்தியுள்ளார்.
திருவிடைமருதூர் அருகே உள்ள மல்லபுரம் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் ரமேஷ். இவரது மகளின் திருமணம் நேற்று நடைபெற்றது.
அைத ஒட்டி, ஐந்து கிராமங்களை உள்ளடக்கிய 900 குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை அழைப்பிதழில் அச்சடித்து வீடுவீடாகச் சென்று கொடுத்தார்.
ஊர் மக்கள் சாதி, மதம், கட்சி என எவ்வித பாகுபாடும் இன்றி திருமணத்துக்கு திரண்டு வந்து மணமக்களை வாழ்த்திச் சென்றனர். அனைவரும் ஒரே குடும்பம் என்ற உணர்வோடு திருமணத்தை நடத்திய ஊராட்சி மன்றத் தலைவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இரு கைகளும் இல்லாத பிளஸ்-2
மாணவி தேர்வில் சாதனை; பாராட்டு
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அறிவகம் குழந்தைகள் நலக் காப்பகத்தில் பெற்றோரால் கைவிடப்பட்ட, இரண்டு கைகளும் இல்லாத மாணவி லெட்சுமி, மயிலாடுதுறை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து பிளஸ்-2 பொதுத்தேர்வில் 277 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். மாணவியை அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்தி, பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
சாகித்ய அகாடமியின் பரிசுக்கு எழுத்தாளர் மாலனின் நூல் தேர்வு
சென்னை: இந்த ஆண்டின் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமியின் பரிசுக்கு எழுத்தாளர் மாலன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாலன் எழுதிய 'ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்' நூலுக்கு மொழிபெயர்ப்புக்கான பரிசு தரப்படுகிறது.
ஐந்தாண்டில் 1,000 காவலர்கள் உயிர் துறப்பு; 5,000 பேர் பதவி விலகல்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஐந்தாண்டுகளில் 5,000 காவலர்கள் பணியை விட்டு விலகியிருப்பதாகவும் 1,000 பேர் பணிச்சுமை, மன அழுத்தம் காரணமாக தங்களது உயிரை மாய்த்துக் கொண்டிருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகக் காவல்துறை யில் 120,000 காவலர்கள் பணியில் உள்ளதாகத் தகவல்.

