செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு சத்துணவு சாப்பிட்ட 43 மாணவர்களுக்கு வயிற்றுவலி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் அருகிலுள்ள காரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக மாணவர்களுக்கு பள்ளியில் இரும்புச்சத்து மாத்திரை வழங்கப்பட்டிருந்த நிலையில், பாதிப்புக்கு காரணம் உணவா? மாத்திரையா? என விசாரணை நடந்து வருகிறது.
43 மாணவர்கள் சிகிச்சைக்கு அனுமதி
1 mins read
-

