காரில் கட்டுக்கட்டாக இருந்த ரூ.2 கோடி பணம் பறிமுதல்

காரில் கட்டுக்கட்டாக இருந்த ரூ.2 கோடி பணம் பறிமுதல்

1 mins read
e906650b-1153-49a7-af6d-2ef68c7e941c
-

சென்னை: சென்னை துறை­மு­கம் காவ­லர்­கள், மண்­ணடி அருகே வாக­னச் சோதனை நடத்­தி­ய­போது, ஆந்­தி­ரப் பதிவு எண் கொண்ட காரில் கட்­டுக்­கட்­டாக இரண்டு கோடி ரூபாய் பணம் இருந்­தது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

காரில் வந்த இரு­வ­ரிடம் விசா­ரித்­த­போது, அவர்­கள் ஆந்­திரா வின் ஓங்­கோல் பகு­தி­யைச் சேர்ந்த ஜெய்­சங்­கர், நாரா­ய­ணன் என்­பது தெரி­ய­வந்­தது.

நகை மொத்த வியா­பா­ரம் செய்­யும் இரு­வ­ரும் சௌகார்பேட்­டை­யில் நகை வாங்க வந்­த­தா­கக் கூறி­னர். இருப்­பி­னும், அவர்­க­ளி­டம் பணத்­துக்கு உரிய ஆவ­ணங்­கள் இல்­லா­தது தெரி­ய­வந்­தது. பணத்­தை­யும் பணத்­து­டன் பிடி­பட்ட இரு­வ­ரை­யும் வரு­மான வரித்துறை அதி­கா­ரி­க­ளி­டம் காவ­லர்­கள் ஒப்­ப­டைத்­த­னர். படம்: தமிழக ஊடகம்