டெல்லிக்கு விரைந்தார் ஓபிஎஸ்; தேர்தல் ஆணையத்தில் மனு சசிகலா வீட்டின் முன்பு ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு எதிராக அதிமுக தொண்டர்கள் முழக்கம் முறுக்கு சாப்பிட்டபடி மோதலை ரசித்த சசிகலா

டெல்லிக்கு விரைந்தார் ஓபிஎஸ்; தேர்தல் ஆணையத்தில் மனு சசிகலா வீட்டின் முன்பு ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு எதிராக அதிமுக தொண்டர்கள் முழக்கம் முறுக்கு சாப்பிட்டபடி மோதலை ரசித்த சசிகலா

2 mins read
3bfbf992-ef71-4f02-8a00-85f2c120d926
-

சென்னை: அதிமுக தலைவர்களுக்கு இடையே மோதல் போக்கு முற்றி வரும் நிலையில், சென்னை தியாகராயர் நகரில் உள்ள சசிகலா வீட்டின் முன்பாக நேற்று திடீரென அதிமுக தொண்டர்கள் திரண்டனர். கைகளில் அதிமுக கொடியைப் பிடித்திருந்த அவர்கள், ஓபிஎஸ்-ஈபிஎஸ்சுக்கு எதிராக முழக்கமிட்டு, கட்சிக்குத் தலைமைப் பொறுப்பேற்கும் படி சசிகலாவுக்கு அழைப்பு விடுத்தனர்.

நேற்று முன்தினம் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கூடியிருந்த அனைவருமே எடப்பாடியின் ஆதரவாளர்கள் என்பதால், ஆளாளுக்கு ஓபிஎஸ்சை துரோகியே வெளியே போ என்று வெறுப்பேற்றினர். இதனால் அவர் வெளிநடப்பு செய்தார். ஒரு கட்டத்தில் ஓபிஎஸ் மீது தண்ணீர் போத்தல் வீசப்பட்டது. அதிமுகவில் நடந்த இந்த உச்சகட்ட மோதலை வீட்டில் ெதாலைக்காட்சி முன்பாக அமர்ந்து, முறுக்கு சாப்பிட்டுக்கொண்டே சசிகலா ரசித்துக் கொண்டிருந்ததாக ஊடகத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

சென்னை: அதிமுக இணை ஒருங் கிணைப்பாளர் எடப்­பாடி பழ­னி­சாமிக்கு எதி­ராக தலைமைத் தேர்­தல் ஆணை­யத்­தில் புகார் மனு அளிக்க அக்கட்சியின் ஒருங் கிணைப்பாளர் ஓ.பன்­னீர்­செல்­வம் டெல்லிக்கு விரைந்துள்ளார்.

இதனால், பழ­னி­சாமி உள்­ளிட்ட அவ­ரது ஆத­ர­வா­ளர்­கள் அதிர்ச்சி அடைந்­துள்­ள­னர்.

ஜூலை 11ஆம் தேதி நடை­பெ­ற­ உள்ள பொதுக்­குழு கூட்­டத்­துக்குத் தடை விதிக்கக் கோரி தேர்­தல் ஆணை­யத்­தில் மனுவை அவர் தாக்­கல் செய்­துள்­ளார்.

அதில் ஒருங்­கி­ணைப்­பா­ள­ரான தனது ஒப்­பு­தலின்றி பொதுக்­குழு கூட்­டம் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது அதி­முக சட்ட விதி­க­ளுக்கு முரணா­ னது எனக் கூறப்­பட்­டுள்­ளது.

அத்துடன், கட்­சி­யின் விதி­களுக்கு எதி­ராக ஒற்றைத் தலை­மையை ஏற்­ப­டுத்த பழ­னி­சாமி முயற்­சிப்­ப­தா­க­வும் ஓபிஎஸ் மனுவில் புகார் அளித்­துள்­ளார்.

சென்­னை­யில் நேற்று முன்தினம் நடந்த அதி­முக பொதுக்­குழு கூட்­டத்­தில் எந்த ஒரு முடி­வும் எட்­டப்­படவில்லை. இந்­தச் சூழ­லில், ஓ.பன்­னீர்செல்­வம் மேற்ெகாண்டுள்ள ெடல்லி பய­ணம் முக்­கி­யத்­து­வம் வாய்ந்­த­தா­கப் பார்க்­கப்­படு­கிறது.

டெல்­லி­யில் பிர­த­மர் நரேந்­திர ேமாடி, உள்­துறை அமைச்­சர் அமித் ஷா, முக்­கிய பாஜக தலை­வர்­களை அவர் சந்­தித்துப் பேச வாய்ப்­புள்­ள­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

இருப்­பி­னும், அதி­முக உட்­கட்சி விவ­கா­ரத்­தில் தலை­யி­ட­மாட்­டோம் என்று பாஜக ஏற்­கெ­னவே வெளிப்­படை­யாகக் கூறி­விட்­டது.

இந்­நி­லை­யில், அதி­மு­க­வின் பெரும்­பாலான நிர்­வா­கி­களும் ஈபி­எஸ் பக்­கம் நிற்­ப­தால் பாஜக ஆதர­வும் அவ­ருக்கே இருக்­க­லாம் என வும் தக­வல்­கள் கூறுகி­ன்றன.

இதனிடையே, புதிய அதி­பரை தேர்வு செய்­வ­தற்­கான தேர்­தல் அடுத்த மாதம் 18ஆம் தேதி நடை­பெ­ற உள்ள நிலையில், பாஜக கூட்­ ட­ணி­யின் வேட்­பா­ள­ராக திரௌபதி முர்மு போட்­டி­யி­டு­கி­றார்.

இதுகுறித்து மட்டுமே ஈபி­எஸ், ஓபி­எஸ்சை தான் சந்­தித்துப் பேசிய தாக பாஜக மாநி­லத் தலை­வர் அண்­ணா­மலை தெரிவித்துள்ளார்.

ஜூலை 11ஆம் தேதி நடக்க உள்ள கூட்டத்தில் எடப்பாடி பழனி சாமிதான் அதிமுகவின் பொதுச் செயலாளராக வருவார் என அதி முக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தெரிவித்துள்ளார்.