வரதட்சணை கொடுமை: இளைஞர் குடும்பத்தோடு கைது

மதுரை: வர­தட்­சணை கொடுமை குறித்து பெண் ஒரு­வர் மக­ளிர் காவல்­நி­லை­யத்­தில் புகார் அளித் திருந்த நிலை­யில், கண­வர், மாம னார், மாமி­யார் என குடும்­பத்­தோடு மூவர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

மதுரை, டி.வி.எஸ். நக­ரைச் சேர்ந்­த­வர் அழ­கர். துணிக்­கடை உரி­மை­யா­ள­ரான இவ­ரது மகள் வர்­ஷா­வுக்­கும், 24, மதுரை கே.புதூ­ரைச் சேர்ந்த மின் வாரிய உதவி இயக்­கு­நர் கொண்­டல் ராஜின் மகன் ஜனார்த்­த­ன­னுக்­கும், 29, கடந்த 2020ல் இரு வீட்­டார் சம்­ம­தத்­து­டன் திரு­ம­ணம் நடை பெற்­றுள்­ளது.

திரு­ம­ணத்­துக்கு முன்பே நிலம் வாங்­கு­வ­தற்­காக ஜனார்த்­த­னன் குடும்­பத்­தா­ரி­டம் ரூ.23 லட்­சம் பணத்தை பெண் வீட்­டார் கொடுத்து உள்­ள­னர்.

இந்­நி­லை­யில், திரு­ம­ணத்­தின் போது 300 சவ­ரன் தங்க நகை­களை வர்­ஷா­வுக்குப் போட்­டுள்­ள­னர்.

இதைத்­தொ­டர்ந்து, இன்­னும் அதி­க­மாக வர­தட்­சணை கேட்டு வர்­ஷா­வைத் துன்­பு­றுத்தி உள்­ள­னர் கணவர் வீட்டினர்.

ஜனார்த்­த­ன­னும் அவ­ரது தந்தை கொண்­டல்­ரா­ஜும் தின­மும் குடித்து விட்டு வந்து வீட்­டில் ரகளை செய்து வர்­ஷாவை அடித்து துன்புறுத்­தி­ய­தோடு மட்­டு­மன்றி, அழ­கர் நடத்தி வந்த துணிக்­கடையையும் வர­தட்­ச­ணை­யாகக் கேட்டுள்­ள­னர்.

தொடர் கொடு­மை­க­ளால் கடும் மன உளைச்­ச­லுக்கு ஆளான வர்ஷா 'ஷாம்­பூ'வை உட்­கொண்டு உயிரை விடத் துணிந்து, தீவிர சிகிச்­சைக்­குப் பின்­னர் குண­ம­டைந் தார். அவ­ருக்கு குழந்தை பிறந்த பின்­ன­ரும் தொடர்ந்த துன்­பு­றுத்­தல் இறு­தி­யாக கொலை மிரட்­டல் வரை சென்­றுள்­ளது.

இதை­ய­டுத்து, கண­வர் வீட்டி னரின் கொடு­மை­க­ளைத் தாள முடி­யா­மல் வர்ஷா தனது பெற்­றோர் வீட்­டுக்கே திரும்பி வந்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், மீண்­டும் சமா தானப்­ப­டுத்தி மகளை கண­வ­ரு­டன் வாழ­வைக்க திருப்பி அனுப்பி வைத்­துள்­ள­னர்.

அதன்­பின்­ன­ரும், கொடுமைப் படுத்துவது ஒரு முடிவுக்கு வராத தால், வர்ஷா தில­கர்­தி­டல் மக­ளிர் காவல்­நி­லை­யத்­தில் புகார் அளித்தார்.

ஜனார்த்­த­னன் தக­வல்­தொ­ழில் நுட்­பத்­து­றை­யில் பெரிய பத­வி­யில் இருப்­ப­தா­கக் கூறி திரு­ம­ணம் செய்துகெண்­ட­தா­க­வும் இப்­போது அவர் சாதா­ரண பொறுப்­பில்­தான் இருப்பது தெரிய வந்துள்ளதாகவும் வர்ஷா புகா­ரில் கூறி­யி­ருந்­தார்.

இதையடுத்து, வர­தட்­சணை கொடுமை, மோசடி உள்­ளிட்ட பிரி­வு­க­ளின் கீழ், கணவர் ஜனார்த்­தனன், அவரது தந்தை கொண்­டல்­ராஜ், தாய் சுமதி ஆகி­யோர் கைது செய்­யப்­பட்­டு சிறை­யில் அடைக்­கப்­பட்­டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!