தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒரே நாளில் மூன்று கோவில்களில் திருட்டு

1 mins read
0a40bd4f-49ba-401f-a830-504e5ee60cbe
-

திரு­வள்­ளூர்: நெமிலி அக­ரம் கிரா­மத்­தில் உள்ள மூன்று அம்­மன் கோயில்­க­ளின் பூட்டை உடைத்து 24 சவ­ரன் நகை­க­ளை­யும் ரூ.5 லட்­சம் மதிப்­புள்ள உண்­டி­யல் காணிக்­கை­யை­யும் கொள்­ளை­யடித்­துச் சென்ற சந்­தே­கப் பேர்­வழி­க­ளைக் காவ­லர்­கள் தேடி வரு­கின்­ற­னர்.

திரு­வள்­ளூர் மாவட்­டம், நெமிலி அக­ரம் கிரா­மத்­தில் கடம்­பா­டி­யம்­மன் கோயில் உள்­ளது.

வழக்­கம்­போல் கோயி­லைத் திறக்க பூசாரி வந்­த­போது, பூட்டு உடைக்­கப்­பட்­டி­ருப்­பை­தைக் கண்டு அதிர்ச்சி அடைந்­தார்.

அம்­மன் கழுத்­தில் இருந்த ஏழு சவ­ரன் சங்­கிலி கொள்ளை போய் இ­ருந்­தது. உண்­டி­யலை உடைத்து இரண்டு லட்­சத்­துக்­கும் மேலான பணத்­தைக் கள­வாடி உள்­ள­தா­க­ கோயில் நிர்­வா­கி­கள் கூறி­னர்.

அதே கிரா­மத்­தில் உள்ள செல்­லாத்­தம்­மன் கோயில் பூட்டை உடைத்து, அம்­மன் கழுத்­தில் இருந்த 10 சவ­ரன் நகை, உண்­டி­யல் பணம் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டி­ருந்­தது.

அதே­போல், ஊருக்கு வெளிப்­பு­றத்­தில் உள்ள பாப்­பாத்தி அம்­மன் கோயி­லின் பூட்­டை­யும் உடைத்து ஏழு சவ­ரன் நகை, உண்­டி­யல் பணத்தைக் கொள்ளை அடித்­துள்­ள­னர்.

ஒரே நாளில், ஒரே பாணி­யில் மூன்று அம்­மன் கோவில்­களில் கொள்­ளை நடந்­துள்­ளது. மூன்று கோயில்­க­ளி­லும் சேகர் என்­ப­வர்­தான் பூசா­ரி­யாக உள்­ளார். இந்தக் கோயில்களில் சிசி­டிவி கேம­ராக்­கள் பொருத்­தப்­பட்­டி­ருக்­க­வில்லை. விசாரணை நடக்கிறது.