கண்புரை பாதிப்பு ஐந்து மடங்கு அதிகரிப்பு

கண்புரை பாதிப்பு ஐந்து மடங்கு அதிகரிப்பு

1 mins read
c5b8f37b-c5f1-4e7d-bda9-9bc3798efa4b
-

சென்னை: கொவிட்-19 தொற்று காரணமாக சென்னையில் முதியவா்களி டம் கண்புரை பாதிப்பு ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக 'டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனை' மருத்து வா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அந்த மருத்துவமனையின் தலைவரும் முதுநிலை கண் மருத்துவ நிபுணருமான டாக்டா் ஸ்ரீநிவாசன் ஜி.ராவ் கூறுகையில், "கொரோனா அச்சுறுத்தலால் பலரும் தங்களது வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளாமல் தவிர்த்து விட்டனர். தற்போது, கண் பாா்வை சரிவரத் தெரிவ தில்லை என்ற குறைபாட்டு டன் மருத்துவமனைக்கு வரும் 100 பேரில் 60 பேருக்கு கண்புரை நோய் பாதிப்பு உள்ளது. கொரோனாவுக்கு முன்பு 100 பேரில் 10 பேருக்கு மட்டுமே இத்தகைய பாதிப்பு இருந்தது," என்றாா் அவா்.