சமையல் எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தும் வர்த்தகர்கள்

சமையல் எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தும் வர்த்தகர்கள்

1 mins read

தமிழகத்தில் சாலையோர வர்த்தகர்கள் 10ல் ஒருவர் (10%), ஒருமுறை சமைத்த எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இந்திய அளவில் சுகாதாரமான உணவை வழங்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக இம்மாதத் தொடக்கத்தில் மத்திய சுகாதார அமைச்சு அறிவித்திருந்தது.

இந்நிலையில், உணவு தயாரித்து விற்கும் சாலையோர வர்த்தகர்களிடம் 'சிஏஜி' எனும் தொண்டூழியக் குழு ஒன்று கருத்தாய்வு நடத்தியது.

13 மாவட்டங்களைச் சேர்ந்த 2,333 வர்த்தகர்களிடம் நான்கு மாதங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

95 விழுக்காட்டினர் சமையலுக்குத் தேவைப்படும் எண்ணெய்யை மொத்தவிலை மற்றும் சில்லறை வர்த்தகக் கடைகளில் வாங்குவதாகக் கூறினர்.

நான்கு விழுக்காட்டினர் மட்டும் ஹோட்டல்கள், உணவகங்கள், பெரிய நொறுக்குத் தீனி கடைகள் போன்றவற்றிடம் இருந்து பயன்படுத்திய எண்ணெய்யை வாங்குவதாகத் தெரிவித்தனர்.

விலை சிக்கனம் கருதி மூன்றில் ஒருவர் செம்பனை எண்ணெய்யை வாங்குவதாகக் கூறினர்.