முற்றுகிறது மோதல்

முற்றுகிறது மோதல்

2 mins read
faa0c3eb-b2dc-43d4-bfab-bca865250c04
மறைக்கப்படும் இபிஎஸ் படம். கிழிக்கப்படும் ஓபிஎஸ் படம். படங்கள்: தமிழக ஊடகம் -
multi-img1 of 2

சென்னை: ஒற்­றைத் தலைமை விவ­கா­ரத்­தால் அதி­முக தற்­போது இரண்­டா­கப் பிள­வு­பட்­டுள்­ளது.

கடந்த புதன்­கி­ழமை இரவு தொடங்கி விடி­ய­வி­டிய நடை­பெற்ற சட்­டப் போராட்­டத்­துக்­குப் பிறகு கூடிய அதி­முக செயற்­குழு, பொதுக்­கு­ழுக் கூட்­டம் பெரும் குழப்­பத்­து­டன் முடிந்­தது. கூட்­டத்­தில் பெரும்­பா­லானோா் இணை ஒருங்­கி­ணைப்­பாளா் எடப்­பாடி கே.பழ­னி­சா­மி­யின் (இபி­எஸ்) ஆத­ர­வா­ள­ராக இருந்­தனா். அவர்கள் ஒருங்­கி­ணைப்­பாளா் ஓ.பன்­னீா்செல்­வத்தை (ஓபி­எஸ்) கடு­மை­யா­க விமா்சித்து முழக்­க­ மிட்­டனா்.

ஓபி­எஸ் மற்­றும் அவ­ரது ஆத­ர­வா­ளர்­கள் கூட்­டத்தைப் புறக்­

க­ணித்து வெளி­யே­றி­ய­போது ஓபி­எஸ் மீது போத்­தல் வீசப்­பட்­டது. உறுப்­பி­ன­ராக இல்­லாத 600 பேர் கூட்­டத்­தின் முன்­வ­ரி­சை­யில் அமர வைக்­கப்­பட்­டதே இந்­தப் பிரச்­சி­னைக்­குக் கார­ணம் என்று ஓபி­எஸ் ஆத­ர­வா­ள­ரான வைத்­தி­லிங்­கம் நேற்று தெரி­வித்­தார்.

ஜூலை 11ஆம் தேதி மீண்­டும் பொதுக்­கு­ழுக் கூட்­டம் நடை­பெ­றாது என்று அவர் திட்­ட­வட்­ட­மா­கக் கூறு­கி­றார். ஆனால், கே.பி.முனு­சாமி, டி. ஜெயக்­கு­மார், பொள்­ளாச்சி ஜெய­ரா­மன் உள்­ளிட்ட இபி­எஸ் ஆத­ர­வா­ளர்­கள் பொதுக்­கு­ழுக் கூட்­டம் திட்­ட­மிட்­ட­படி நடக்­கும் என்று அடித்­துக் கூறு­கின்­ற­னர். அமை­தி­யாக இருந்த அதி­முக, ஒற்­றைத் தலைமை விவ­கா­ரத்­தால் தற்­போது இரண்­டா­கப் பிரிந்துள்­ளது. இரு­த­ரப்­பி­லி­ருந்­தும் எதி­ரெ­திர் கருத்­து­கள் வெளி­வந்த வண்­ணம் உள்­ளன. வார்த்­தைப்­போர் முற்­றி­வ­ரு­கிறது.

மேலும், பல்­வேறு மாவட்­டங்­களில் அதி­முக அலு­வ­ல­கங்­களில் ஓபி­எஸ் படங்­கள் அகற்­றப்­பட்­டும் பதா­கை­களில் உள்ள அவ­ரது படங்­கள் அழிக்­கப்­பட்­டும் வரு­கின்­றன. நாகை. போடி உள்­ளிட்ட இடங்­களில் இபி­எஸ்­ஸுக்கு எதி­ராக ஆர்ப்­பாட்­டங்­கள் நடத்­தப்­பட்­டன. இந்த மாவட்­டங்­களில் உள்ள அதி­முக அலு­வ­ல­கங்­களில் இபி­எஸ் படங்­கள் அகற்­றப்­பட்டு வரு­கின்­றன. முன்­னாள் அமைச்­சர் டி.ஜெயக்­கு­மார் கூறு­கை­யில், "அதி­மு­க­வுக்கு ஒற்­றைத் தலை­மை­தான் வேண்­டும். அது எடப்­பாடி பழ­னி­சாமி தலை­மை­யில்­தான் இருக்க வேண்­டும் என்று தொண்­டா்­கள் விரும்­பு­கின்­றனா். அது ஜூலை 11ஆம் தேதி நடை­பெ­ற­வுள்ள பொதுக்­கு­ழு­வில் செயல்­ வ­டி­வத்­துக்கு வரும்," என்­றார்.

ஜெயக்குமார்: ஜூலை 11ல் பொதுக்குழு கூடும் - வைத்திலிங்கம்: பொதுக்குழு கூடாது