செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
c4f2450b-008a-4488-b7ca-f1ee42bcc7cf
-

பழிக்குப்பழி வாங்க பதுங்கிய கும்பல்

சென்னை: திருவல்லிக்கேணி தமிழ்நாடு விடுதியில் சந்தே கத்திற்கு இடமளிக்கும் வகையில் சிலர் அறை எடுத்து தங்கி உள்ளதாக கிடைத்த தகவலையடுத்து காவல்துறையினர் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 14 பேரை மடக்கிப் பிடித்த னர். அவர்களில் 9 பேர் சிறுவர்கள். கடந்த ஆண்டு ஐஸ் ஹவுஸ் பகுதியில் விக்கி என்பவர் கொலை செய்யப்பட்ட தற்குப் பழிவாங்கத் திட்டமிட்டு விடுதியில் அறை எடுத்து இந்தக் கும்பல் தங்கியது விசாரணையில் தெரிய வந்தது. வீச்சரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களும் போதைப் பொருள்களும் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டன.

பெண்ணை சுட்ட மர்ம நபர்கள்

வலசை: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சாந்த குமாரி, 21, என்னும் பெண் நள்ளிரவில் தமது வீட்டின் முன் உட்கார்ந்து இருந்தபோது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்ட தில் அவர் மீது பால்ரஸ் குண்டு பாய்ந்தது. இடுப்பில் பலத்த காயமடைந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

காரை பந்தாடிய யானைகள்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே தேசிய நெடுஞ் சாலையை மறைத்தபடி இரண்டு காட்டு யானைகள் குட்டி யுடன் சென்றதால் ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தினர். வாகனங்களின் நடுவே சென்ற யானைகள் திடீ ரென தாக்க வந்ததால் அச்சமடைந்த ஓட்டுநர்கள் வாகனங் களைத் திருப்ப முயன்றபோது ஒரு வெள்ளை நிற காரை காட்டு யானைகள் தும்பிக்கையால் தாக்கத் தொடங்கின. அந்த காரில் இருந்த ஆடவர் கதவைத் திறந்து தப்பித்து ஓடினார். சிறிது நேரம் சாலையில் பதற்றத்தை ஏற்படுத்திய யானைகள் பின்னர் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன.

லஞ்சம்: ஜிஎஸ்டி அதிகாரி கைது

கரூர்: கரூர் தான்தோன்றி மலைப் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் கம்பிவேலி உற்பத்தி நிறுவனம் தொடங்க 'ஜிஎஸ்டி ஆர்சி' எண் பெறுவதற்கு இணையம் மூலம் விண்ணப்பித்தார். கரூர் ஜிஎஸ்டி அலுவலகத்தில் இருந்த ஜிஎஸ்டி ஆய்வாளர் சுபேசிங், 'ஜிஎஸ்டி ஆர்சி' எண் வழங்க ரூ.5,000 லஞ்சம் கேட்டார். லஞ்சம் வாங்கும்போது, மறைந்திருந்த சிபிஐ அதிகாரிகள் சுபேசிங்கை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.

சீமான்: தமிழக அரசு கொடுஞ்செயல்

சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசுப்பள்ளி ஆசிரி யர்களை தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தின் மூலம் நிரப்ப தமிழக அரசு முடிவு செய்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. லட்சக்கணக்கான இளைஞர்களின் அரசு ஆசி ரியர் பணி கனவை கானல் நீராக்கும் திமுக அரசின் இக்கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது," என்றார்.