26 ஆண்டுகளாக முடங்கும் ஜெயா சொத்துகள்

பெங்­க­ளூரு: மறைந்த முன்­னாள் முதல்­வர் ஜெய­ல­லிதா மீது சொத்­துக்­கு­விப்பு வழக்­குத் தொட­ரப்­பட்­ட­போது 1996 டிசம்­பர் 11ஆம் தேதி அவ­ரது வீட்­டில் சோதனை நடத்­தப்­பட்­டது.

சோத­னை­யின்­போது 11,344 சேலை­கள், 1040 வீடியோ கேசட்­டு­கள், 750 ஜோடி கால­ணி­கள், 250 சால்­வை­கள், 91 கைக்­க­டி­

கா­ரங்­கள், 24 டேப்­ரிக்­கார்­டர்­கள், 2 ஆடியோ டிஸ்க், 4 சி.டி. பிளே­யர், 1 வீடியோ கேமரா, 8 வீடியோ காசட் ரெக்­கார்­டர்­கள், 10 தொலைக் காட்சிப் பெட்டிகள், 12 குளிர்­

சா­தனப் பெட்­டி­கள், 3 இரும்புப் பெட்­ட­கங்­கள், 44 குளிரூட்டிகள், 33 தொலைபேசி மற்­றும் இண்­டர்­காம்­ போன்­றவை ஜெய­ல­லி­தா­வின் போயஸ் கார்­டன் வீட்­டி­லி­ருந்து பறி­மு­தல் செய்­யப்­பட்­டன. இவற்றை கர்­நா­டக அரசு பெங்­க­ளூரு­வில் உள்ள அரசு கரு­வூ­லத்­தில் வைத்து பாது­காத்து வரு­கிறது.

இந்த நிலை­யில், பெங்­க­ளூரு­வைச் சேர்ந்த சமூக ஆர்­வ­ல­ரும் தக­வல் அறி­யும் உரி­மைச் சட்ட ஆர்­வ­ல­ரு­மான டி. நர­சிம்ம மூர்த்தி என்­ப­வர் உச்ச நீதி­மன்ற தலைமை நீதி­ப­திக்கு ஒரு கடி­தம் எழுதியுள்­ளார்.

"ஜெய­ல­லிதா பயன்­ப­டுத்­திய பொருள்­கள் 26 ஆண்­டு­க­ளாக கரு­வூ­லத்­தில் இருப்­ப­தால் அது வீணாக வாய்ப்பு உள்­ளது. அவற்­றைப் பயன்­ப­டுத்தமுடி­யாத அள­வுக்கு சேத­மா­கும் சூழல் உள்­ளது.

"எனவே சட்­டத்­திற்கு உட்­பட்டு இந்தப் பொருள்­களை ஏலம் விட்­டால் ஜெய­ல­லி­தா­வின் நல விரும்­பி­கள் அவற்றை வாங்கி பொக்­கி­ஷ­மாகப் பாது­காத்து வைப்­பார்­கள். ஏலம் மூலம் கிடைக்­கும் பணத்தை மக்­கள் நலப் பணி­

க­ளுக்குப் பயன்­ப­டுத்­த­லாம்," என தமது கடி­தத்­தில் கூறி­யுள்­ள அவர், நீதி­ப­தி­யின் பதிலை எதிர்­பார்க்­கி­றார்.

மரண விசா­ரணை அறிக்கை தாக்­கல் செய்ய கெடு

ஜெய­ல­லிதா மர­ணம் குறித்து விசா­ரிக்­கும் நீதி­பதி ஆறு­மு­க­சாமி தலை­மை­யி­லான ஆணை­யம், தனது இறுதி அறிக்­கையை ஆகஸ்ட் 3ஆம் தேதி சமா்ப்­பிக்க வேண்­டும் என தமி­ழக அரசு உத்­த­ர­விட்­டுள்­ளது. 2017 முதல் பல்­வேறு தரப்­பி­ன­ரி­ட­மும் விசா­ரித்து வந்த ஆணை­யத்­திற்கு இறுதி அறிக்­கை­யைத் தாக்கல் செய்ய 12 முறை கால அவ­கா­சம் அளிக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!