செங்கல்பட்டு: சென்னையில் 68 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள 1,300 கிலோ கஞ்சா, 30 கிராம் ஹெராயின், பிரவுன் சுகா் ஆகிய போதைப் பொருள்களை அழிக்க நீதிமன்றத்தில் உத்தரவு பெறப்பட்டது.
செங்கல்பட்டு அருகே தென்மேல்பாக்கத்தில் உள்ள தனியாா் ரசாயனப் பொருள்கள் அழிக்கும் ஆலையில் சுமாா் ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சனிக்கிழமை சென்னை பெருநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவால் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் இந்த போதைப் பொருள்கள் அழிக்கப்பட்டன. இதன் பின்னா் ஆணையர் சங்கா் ஜிவால் செய்தியாளர்களிடம் பேசினார்.
"சென்னையில் போதைப்
பொருளை ஒழிக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. போதைப்பொருள் பழக்கத்தை முற்றிலும் தடுக்கும் வகையில் பொதுமக்கள், பள்ளி-கல்லூரி மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.
"இதுவரை 489 பள்ளி, கல்லூரிகளில் சுமாா் 45,000 மாணவா்களைச் சந்தித்து போதைப் பொருள்களைப் பயன்படுத்து
வதால் ஏற்படும் தீயவிளைவுகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தியுள்ளோம். சென்னையில் தொடா்ச்சியாக போதைப்பொருள் கடத்தல், விற்பனை போன்ற செயல்களில் ஈடுபடுகிறவா்களின் சொத்துகளை முடக்குவதற்குரிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட மேலும் 2,000 கிலோ கஞ்சாவை அழிக்க நீதிமன்ற அனுமதி பெற முயன்றுவருகிறோம்," என்றார்.

