சென்னை: தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 1,500ஐ நெருங்கி வரும் நிலையில், பொது இடங்களில் முகக்கவசம் அணியா விடில் அபராதம் விதிக்கப்படும் என்று மாநில அரசு எச்சரித்துள்ளது.
குறிப்பாக நகர்ப்புறங்களில் இந்த பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கையாக தடுப்பு நடவடிக்கைகளையும் பரிசோதனைகளையும் மீண்டும் தீவிரப்படுத்தி உள்ள அரசு, கட்டுப் பாடுகளையும் விதித்துள்ளது.
இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் இருத்தல், முகக்கவசம் அணியாமல் இருத்தல் உள்ளிட்ட கொவிட் தடுப்பு முறைகளை முறையாகப் பின்பற்றாமல் கவனக்குறைவாக இருப்பதால்தான் தொற்று அதிகரித்து வருகிறது. கூட்டம் அதிக முள்ள இடங்களைத் தவிர்த்து, வாய்-மூக்கை மூடியபடி முகக்கவசத்தை அணியும்படி மக்களை அது கேட்டுக்கொண்டுள்ளது.

