50 ஆண்டு காலத்தில் புதிய உச்சத்தில் முட்டை விலை

நாமக்­கல்: தமி­ழ­கத்­தில் முட்டை ஒன்­றின் விலை ரூ.5.50 காசு­கள் என்ற புதிய உச்­சத்தை எட்­டி­யுள்­ளது. இந்த விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்­தது.

கடந்த 50 ஆண்­டு­கால வர­லாற்­றில் இந்த அள­வுக்கு முட்டை விலை உயர்ந்­துள்­ளது இதுவே முதல்­முறை என்று கூறப்­ப­டு­கிறது.

முட்­டைக்­குப் பெயர் பெற்ற நாமக்­கல் மாவட்­டத்­தில் ஆயி­ரத்­துக்­கும் ேமற்­பட்ட கோழிப்­பண்­ணை­கள் உள்­ளன. இவற்­றின் மூலம் நாள் ஒன்­றுக்கு ஐந்து கோடி முட்­டை­கள் உற்­பத்தி செய்­யப்­ப­டு­கின்­றன.

இங்கு உற்­பத்­தி­யா­கும் முட்­டை­கள் தமி­ழ­கம் மட்­டு­மின்றி கேரளா உள்­ளிட்ட பல்­வேறு வெளி­மா­நி­லங்களுக்­கும் அனுப்­பப்­ப­டு­கின்­றன.

கோழித் தீவ­னத்­தின் மூலப்­பொ­ருள்­கள் விலை உயர்வு, பண்­ணைப் பரா­ம­ரிப்­புச் செலவு அதி­க­ரிப்­பின் கார­ண­மாக பண்­ணை­களில் விடப்­படும் முட்­டை­யி­டும் கோழிகளின் எண்­ணிக்கை குறைந்துவிட்­டன.

இத­னால், உற்­பத்தி குறைந்து கோடைக்­கா­லம் தொடங்­கி­யது முதல் முட்­டை­யின் விலை தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கிறது என்று கோழிப்பண்ணை உரி­மை­யா­ளர்­கள் கூறி­யுள்­ள­னர்.

இச்சூழ­லில், முட்டை ஒன்­றின் கொள்­மு­தல் விலையை ரூ.5.50 காசாக நிர்­ண­யம் செய்­துள்­ள­தாக தேசிய முட்டை ஒருங்­கி­ணைப்­புக் குழு அறி­வித்­துள்­ளது.

கடந்த நான்கு மாதங்­க­ளாக கோழி இறைச்சி விலை­யும் மீன் விலை­யும் அதி­க­மாக இருந்து வரும் நிலை­யில், தற்­போது முட்டை விலை­யும் உயர்ந்­தி­ருப்­ப­தால் ஏழை, நடுத்­தர மக்­கள் அதிர்ச்சி அடைந்­துள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!