'மகன் மரணம்; காவலர்களே காரணம்'

'மகன் மரணம்; காவலர்களே காரணம்'

1 mins read
bd151daa-cebc-4445-83b5-a38238abe066
-

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திடச் சென்ற தனது மகன் உயிரிழந்ததற்கு குலசேகரம் காவல்துறையினரே காரணம் என ஒரு பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர்.

முல்லைச்சேரி விளையைச் சேர்ந்த இளைஞர் அஜித், வழக்கு ஒன்றில் பிணை பெற்றிருந்தார். குலசேகரம் காவல்நிலையத்தில் அவர் கையெழுத்திட்டு வந்த நிலையில், கடந்த 23ஆம் தேதி காவல்நிலையத்திற்குச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், அஜித் நஞ்சு உண்டதால் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டிருப்ப தாக இளைஞரின் பெற்றோரி டம் காவல்நிலைய ஆய்வாளர் பாலமுருகன் கூறியதாகத் தெரிகிறது. ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அஜித் மரணமடைந்த நிலையில், தனது மகனின் உயிரிழப்புக்கு காவலர்களே காரணம் என பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.