கடற்கரையில் மயங்கிக் கிடந்த முதிய இலங்கை அகதிகள் மீட்பு

ராமேஸ்­வ­ரம்: 70 வயது மதிக்­கத் தக்க இலங்­கைத் தம்­ப­தி­யர், தனுஷ்­கோடி அருகே கடற்­கரை­யில் மயங்­கிய நிலை­யில் மீட்­கப்­பட்­ட­னர்.

இலங்­கை­யி­லி­ருந்து நள்­ளி­ர­வில் கள்­ளப் படகு மூலம் தமிழகக் கரையோரம் வந்­தி­றங்­கிய இந்த முதிய தம்­ப­தி­கள் உணவு, குடி நீரின்றி சுயநினைவின்றி இருந்தனர்.

திரு­கோ­ண­ம­லை­யைச் சேர்ந்த இவர்­கள், பிளாஸ்­டிக் பட­கில் தனுஷ்­கோடி கோதண்­ட­ரா­மர் கோயில் அருகே உள்ள மணல் திட்­டை­ வந்­த­டைந்­ததா­க­வும் கரையை அடைந்­த­தும் தம்­ப­தி­யர் மயங்கி விழுந்­த­தா­க­வும் இந்­திய ஊட­கத் தகவல்கள் தெரி­விக்­கின்­றன.

இது­கு­றித்து தக­வல் அறிந்த கடற்­படை காவல்­து­றை­யி­னர், தம்ப தியை மீட்டு, அவர்­க­ளுக்கு முதலு தவி அளித்து ராமேஸ்­வ­ரம் அரசு மருத்­து­வ­ம­னைக்கு அனுப்­பி­வைத்­த­னர்.

இந்த தம்பதியரைப் ­போல் கடந்த சில நாள்­களில் மட்­டும் இலங்­கை­யைச் சேர்ந்த 85 பேர் கடல்மார்க்­க­மாக அக­தி­க­ளாக படகுகள் மூலம் தமி­ழ­கத்­துக்கு வந்துள்ளனர்.

அவர்­கள் அனை­வ­ரும் மீட்­கப் பட்டு மண்­ட­பம் அக­தி­கள் முகா­மில் தங்கவைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இலங்­கை­யில் பொரு­ளா­தார நெருக்­கடி கார­ண­மாக கடும் விலை வாசி உயர்­வால், அங்­கி­ருக்­கும் மக்­கள் வரு­மா­ன­மின்றி, வாழ்க்­கையை இல­கு­வாக கொண்­டு­செல்லமுடி­யா­மல் தமிழ்­நாடு உள்­ளிட்ட அண்டை மாநி­லங்­க­ளுக்கு அக­தி­க­ளாகச் செல்கின்றனர்.

அப்படி வந்தவர்களின் உயி­ரைக் காப்­பாற்­று­வ­தில் காவலர்களும் அதி­கா­ரி­களும் மனி­தா­பி­மா­ன­மற்ற முறை­யில் அலட்­சி­ய­மாக செயல்­பட்டது வேதனை அளிப்­ப­தாக அந்­தப் பகுதி மீன­வர்­கள் வருத்­தம் தெரி­வித்­துள்ளனர். மூன்று மணி நேரத்துக்குப் பிறகே தம்பதியர் மீட்கப்பட்டதாகவும் கூறினர்.

“அவர்­கள் எப்­படி இங்கு வந்­தார்­கள், எப்­போது வந்­தார்­கள் என்ற விவ­ரம் அவர்­கள் சுய­நி­னை­வுக்கு வந்­த­பி­றகே தெரி­ய­வ­ரும்,” என்று கடற்படை காவல்துறையினர் தெரி­வித்­த­னர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!