சென்னை: சென்னை ராயப் பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற அதிமுக தலைமைக் கழக நிர்வாகி கள் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியை வழி நடத்தும்படி எடப்பாடி பழனிசாமியைப் பொறுப்பாளர்கள் கேட்டுக்கொண்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
துரோகத்தின் ஒட்டுமொத்த அடையாளம் ஓ.பன்னீர்செல்வம்தான் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஜெயக்குமார் பேசியபோது, "நிறைய விவகாரங்கள் குறித்து ஆேலாசித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. அதெல் லாம் மிகவும் ரகசியமானது. இன்று எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அறிவிக்கலாமா? கூடாதா? என்பது குறித்து கட்சிதான் முடிவு செய்யும்.
"துரோகத்தின் அடையாளமாக ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார். ஆரம்ப காலத்திலிருந்து அதிமுக விற்கு அவர் துரோகம் செய்துள்ளார். ஜூலை 11ஆம் தேதி முக்கிய முடிவு கள் எடுக்கப்படும். மு.க.ஸ்டாலினை ஓ.பி.ரவீந்திரநாத் சந்தித்ததை எந்த ஒரு அதிமுக தொண்டனும் ஏற்றுக்கொள்ள மாட்டான்.
"பொருளாளர் பதவியில் ஓ.பன்னீர்செல்வம் நீடிப்பாரா என்பது குறித்து பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்படும்," என்றார்.
அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் நேற்று கூட்டியிருந்த நிைலயில், அது சட்டப்படி செல்லாது என கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலை மைக்கான கோரிக்கையோடு திரு பன்னீர்செல்வத்துக்கு எதிராக களமிறங்கிய பழனிசாமியின் ஆதர வாளர்கள் அவரை ஓரம் கட்டி வரு கின்றனர்.
இந்நிலையில், நேற்றைய ஆலோசனைக் கூட்டம் செல்லாது என டுவிட்டரில் பதிவிட்டிருந்த ஓபிஎஸ், ஒருங்கிணைப்பாளரான தனது ஒப்புதலின்றி நடைபெறும் கூட்டம் எப்படிச் செல்லும் என்றும் கேள்வி எழுப்பினார்.
திருத்தணி: அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், ஓபிஎஸ் தென்மாவட்டங்களிலும் சசிகலா வடமாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். திருத்தணியில் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பேசிய திருமதி சசிகலா, கட்சியைக் கட்டிக்காக்கும் பொறுப்பு தனக்கு இருப்பதாகவும் தொண்டர்களும் பொது மக்களும் தம்முடன் இருப்பதாகவும் ஆதரிப்பதாகவும் கூறினார். ஒற்றைத் தலைமை கோரிக்கையை ஆதரிப்பதாகக் கூறிய அவர், அதேசமயத்தில், சிலரை மட்டும் ஆதரவாக வைத்துக் கொண்டு பதவிக்கு வர நினைப்போரை தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள் எனவும் பழனிசாமியை மறைமுகமாகச் சாடினார்.

