உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மனு

உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மனு

2 mins read
7a913163-e7e6-4892-a791-b15cb2697deb
-

சென்னை: அதி­மு­க­வில் ஒற்­றைத் தலைமை பிரச்­சினை விடாது வெடித்­துக் கொண்­டி­ருக்­கும் நிலை­யில், அதி­முக பொதுக்­குழு தொடர் பில் ஓ.பன்­னீர்­செல்­வம் உச்ச நீதி­மன்­றத்­தில் கேவி­யட் மனுத் தாக்­கல் செய்­துள்­ளார்.

பொதுக்­குழு தொடர்­பாக சென்னை உயர் நீதி­மன்ற உத்­த­ரவை எதிர்த்து யார் ஒரு­வர் மேல்­மு­றை­யீடு செய்­தா­லும் தங்­க­ளது கருத்­தை­யும் கேட்­க­வேண்­டும் என்­றும் தங்­கள் தரப்­பி­ன­ரைக் கேட்­கா­மல் உத்­த­ர­வைப் பிறப்­பிக்­கக் கூடாது என­வும் மனு­வில் அவர் வலி­யு­றுத்தி உள்­ளார்.

இத­னி­டையே, கட்­சி­யின் எதிர்­கா­லத்­தைக் கரு­தித்­தான் எடப்­பாடி பழ­னி­சா­மி­யின் பின்­னால் தொண்­டர்­களும் நிர்­வா­கி­களும் அணி­வகுப்­ப­தாக திருப்­ப­ரங்­குன்­றம் எம்­எல்ஏ ராஜன் செல்­லப்பா கூறி­யுள்­ளார். அண்­மை­யில் நடந்த பொதுக்­குழு கூட்­டத்­தில் அவ­ம­ரி­யாதை ஏற்­பட்­டுள்ள சூழ­லில், கட்­சியை விட்டு ஓபி­எஸ் ஒதுங்­கிக்­கொள்­வதுதான் நல்­லது என்­றும் அவர் கூறி­னார்.

இந்­நி­லை­யில், ஓ.பன்­னீர்­செல்­வம் ஆத­ர­வா­ளர்­க­ளாக இருந்த பெரம்பலூர் ஒன்­றி­யச் செய­லா­ளர் குன்­னம் ராமச்­சந்­தி­ரன் தலை­மை­யி­லான ஒன்­பது பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள் பழ­னி­ச்சாமி தரப்­புக்கு ஆத­ரவு தெரிவித்து அணி மாறி­யுள்­ள­னர்.

இதன்­மூ­லம் ஜூலை 11ல் பழ­னி­ச்சாமி தரப்பு எடுக்­கும் முடி­வுக்கு மொத்­த­முள்ள 2,665 பேரில் 2,432 பேர் ஆத­ரவு தெரிவித்­துள்­ள­னர்.

இதற்­கி­டையே, ஜூன் 23ல் நடந்த அதி­முக பொதுக்­கு­ழு­வில் உயர் நீதி­மன்ற உத்­த­ரவு மீறப்­பட்ட தாக பழ­னிச்­சா­மிக்கு எதி­ராக பொதுக்­குழு உறுப்­பி­னர் சண்­மு­கம் நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கு தொடர்ந்­துள்­ளார். உயர்­நீ­தி­மன்­றம் அனு­ம­தித்த தீர்­மா­னங்­களை அதி முக பொதுக்­குழு நிரா­க­ரித்­தது நீதிமன்ற அவ­ம­திப்பு என­வும் மனு­வில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார்.

ஜூலை 11ல் சென்னை வான­க­ரம் ஸ்ரீவாரு மண்­ட­பத்­தி­லேயே மீண்­டும் பொதுக்­கு­ழுவை நடத்த அதி­முக முடிவு செய்­துள்ள நிலை­யில், சசி­கலா-ஓபி­எஸ் இரு­வ­ரும் ஒரே அணி­யில் திரளவேண்­டும் என்று தென்மாவட்ட நிர்­வா­கி­கள் பல­ரும் கோரிக்கை விடுக்­கத் தொடங்கி உள்­ள­னர்.