விமானச் சேவை அதிகரிப்பால் ஒரேநேரத்தில் இரு ஓடுபாதை

விமானச் சேவை அதிகரிப்பால் ஒரேநேரத்தில் இரு ஓடுபாதை

1 mins read
c3de7ff4-796b-476b-9728-0674e797e89f
-

சென்னை: சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க இரு ஓடுபாதைகள் உள்ளன. இவ்விரு ஓடுபாதைகளையும் ஒரேநேரத்தில் பயன்படுத்த விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது.

விமானச் சேவை அதிகரித்து வருவதால் அடுத்த மாதம் முதல் இத் திட்டம் அமலுக்கு வரவுள்ளது.

முதல் ஓடுபாதை ஏறக்குறைய 3.66 கிலோ மீட்டர் தொலைவுடனும் இரண்டாவது ஓடுபாதை 2.89 கிலோ மீட்டர் தூரத்துடனும் அமைந்துள்ளன.

முதல் ஓடுபாதையில் பெரிய ரக விமானங்களும் இரண்டாவது ஓடுபாதையில் சிறிய ரக விமானங்களும் தரையிறங்கி வந்தன.

இந்நிலையில், முக்கிய ஓடுபாதையாக பயன்படுத்தப் படும் முதல் ஓடுபாதையைப் போல் இரண்டாவது ஓடு பாதையையும் விரிவுபடுத்த உள்ளனர். முதல் ஓடுபாதை புறப்பாட்டிற்காகவும் இரண்டாவது ஓடுபாதை தரையிறங்கவும் பயன்படுத் தப்பட உள்ளன. இரண்டு ஓடுபாதைகளில் இருந்தும் ஒரு மணி நேரத்தில் 30 முதல் 50 விமானங்களை இயக்கமுடியும் என தகவல்.