அன்புமணி: ஆளுநரும் ஒரு நல்ல முடிவை எடுப்பார் என நம்பிக்கை இணைய சூதாட்டத்தை தடை செய்ய ஒப்புதல்

அன்புமணி: ஆளுநரும் ஒரு நல்ல முடிவை எடுப்பார் என நம்பிக்கை இணைய சூதாட்டத்தை தடை செய்ய ஒப்புதல்

2 mins read
28982d70-9d3c-4a2c-95b0-55bb1fcfcd7a
71 பக்க அறிக்கையை முதல்வரிடம் அளிக்கும் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு. படம்: தமிழக ஊடகம் -

ெசன்னை: தமி­ழ­கத்­தில் இணைய ரம்மி சூதாட்­டங்­க­ளைத் தடை செய்­வ­தற்­கான அவ­ச­ரச் சட்­டத் திற்கு தமி­ழக அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தில் ஒப்­பு­தல் அளிக்­கப்பட்­டுள்­ளது.

சென்னை தலை­மைச் செயல கத்­தில் முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தலை­மை­யில் நடை­பெற்ற அமைச்ச ரவைக் கூட்­டத்­தில், ஓய்­வு­பெற்ற நீதி­பதி கே.சந்­துரு அளித்த அறிக்கை விவரங்கள் குறித்து விவா­திக்கப்பட்டு, இணைய ரம்மி விளை­யாட்டை தடை­செய்­வது தொடர்­பான அவ­சர சட்­டத்­திற்கு ஒப்­பு­தல் அளிக்­கப்பட்­டது.

இந்த முடி­வுக்கு ஆளு­நர் ஒப்பு தல் அளித்­த­பின்­னர் அவ­ச­ரச் சட்­டம் பிறப்­பிக்­கப்­படும் என தமி­ழக ஊட­கத் தக­வல்­கள் குறிப்­பிட்டுள்­ளன.

இணைய ரம்மி விளை­யாட்டு களைத் தடை செய்­வது குறித்து ஓய்வுபெற்ற நீதி­பதி சந்­துரு 71 பக்க அறிக்­கை­களை நேற்று முன் தினம் முதல்­வ­ரி­டம் சமர்ப்­பித்­தார்.

அதில், இந்த விளையாட்டு திறனை வளர்க்­க­வில்லை. மக்­க­ளின் உடல்­ந­லன் இந்த விளை­யாட்­டு­க­ளால் பாதிக்­கப்­படுகிறது. தமிழகத்­தில் கடந்த சில மாதங்­களில் மட்­டும் இந்த விளை­யாட்டுகளில் பணத்தை இழந்த 17 பேர் உயிரை மாய்த்­துக்­கொண்­டுள்­ள­னர்.

இணைய விளை­யாட்­டு­களை முறைப்­ப­டுத்­து­வது இய­லாது. தடை­செய்­வது ஒன்றே சிறந்த வழி.

இணைய விளை­யாட்டு நிறு­வ­னங்­கள் பணம் சம்­பா­திக்­கும் நோக்­கத்­து­டன் மட்­டும் செயல்படு­கின்றன. இதன் அடிப்­ப­டை­யில், அவ­சர சட்­டத்தை தமி­ழக அரசு கொண்­டு­வ­ர­லாம் என தெரிவிக்கப் பட்டிருந்தது.

இதனிைடயே, இணைய சூதாட்ட தடை சட்­டத்­திற்கு தமி­ழக ஆளு­நர் ஒப்­பு­தல் அளிப்­பார் என பாட்­டாளி மக்­கள் கட்­சித் தலை­வர் அன்­பு­மணி ராம­தாஸ் நம்­பிக்கை தெரி­வித்துள்­ளார்.

அப்­பா­வி­கள் உயிரை இழப்பதையும் அவர்­க­ளின் குடும்­பங்­கள் நடுத்­தெ­ரு­வுக்கு வரு­வ­தை­யும் தடுக்­கும் நோக்­கு­ட­னான இந்த நட­வ­டிக்கை வர­வேற்­கத்­தக்­கது; பாராட்­டத்­தக்­கது ஆகும் என அவர் மேலும் கூறியுள்ளார்.